உமா ஓய வேலைத் திட்டம் தொடர்பில் ஆராய நாளையதினம் அமைச்சரவை குழு பண்டாரவளைக்கு விஜயம்

உமா ஓய வேலைத் திட்டம்
uma oya project

உமா ஓய வேலைத் திட்டம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, அமைச்சரவை உப குழு நாளை உமா ஓய வேலைத் திட்டம் குறித்த கள ஆய்வினை நடத்தவுள்ளனர்.

உமா ஓய வேலைத் திட்டத்திற்கு எதிராக பண்டாரவளை நகரில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளையடுத்து, அதனை அண்டிய, பகுதிகளில் நிலவும் நீர்ப் பிரச்சினை பற்றி ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த குழுவை நியதித்தார்.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சம்பிக்க ரணவக்க, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]