உமாஓயா திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

உமா ஓயா வேலைத்திட்டத்தின் அகழ்வுப் பணிகள் இன்றுமுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்யை மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

நீரை எடுத்துச்செல்லும் சுரங்கப் பாதையில் பெருமளவிலான நீர்க்கசிவு ஏற்படுவதினாலும், மக்களின் போராட்டங்களை முன்னிலைப்படுத்தியும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனான அவசர பேச்சுகளின் அடிப்படையிலும் மேற்கண்ட முடிவை எடுப்பதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

இம்மாதம் 31ஆம் திகதி நோர்வே நாட்டிலிருந்து விஞ்ஞான தொழில் நுட்பவியலாளர் குழுவினர், உமா ஓயா திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் குறித்து நேரடியாக விரிவாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்கவுள்ளனர். இது தொடர்பான அறிக்கை இரு வாரங்களில் வெளியிட்டபின்னர் உமா ஓயா திட்டம் முன்னெடுப்பது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது.

உமா ஓயா திட்டத்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க, பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபயசிரியிடம் 300 மில்லியன் ரூபா நிதியும், அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா வேலைத்திட்டத்தின் சுரங்கப் பாதைக்குள் இருந்துவரும் இயந்திர சாதனங்களையும் அப்புறப்படுத்துமாறும், சம்மந்தப்பட்ட அமைச்சின் செயலாளரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]