உன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரங்களைக் கேட்டறிந்த பொன்னையா ஜோசெப்

உன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் ஏற்பட்ட நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளின் மனக்குமுறல்களை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் கேட்டறிந்தார்.

ஞாயிற்றுக்கிழமை 10.06.2018 ஆயித்தியமலைப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அவர் உன்னிச்சைப் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அழைப்பையேற்று அப்பகுதிக்குச் சென்று அவர்களது பாதிப்பின் துயரங்களைக் கேட்டறிந்து கொண்டதாக உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.

கடந்த 24ஆம் திகதி உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் சடுதியாகத் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசனக் குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் அதனால் தாங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயருடனான சந்திப்போது விவசாயிகள் எடுத்துக் கூறியுள்ளனர்.

சடுதியாக உன்னிச்சைக் குளத்தின் மடை திறக்கப்பட்தனால் அக்குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தாம் பாதிக்கப்பட்டதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கேற்பட்ட பாதிப்பின் தன்மையைத் தாம் அறிந்துள்ளதோடு இந்தத் துயர நிகழ்வு குறித்து விவசாயிகளுக்கு உதவுதற்கான வழிவகைகளை தாம் ஆராயவிருப்பதாக ஆயர் விவசாயிகளிடம் ஆறுதல் தெரிவித்தார் என்று உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் மேலும் தெரிவித்தார்.

உன்னிச்சைக்குளம் மடை உன்னிச்சைக்குளம் மடை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]