உத்தர பிரதேச எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது, உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே இன்று (புதன்கிழமை) காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 6 பெட்டிகள் தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதோடு, லக்னோ, வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச எக்ஸ்பிரஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]