உதவி ஆசிரியர்களுக்கு அனுமதி மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் : கணபதி கனகராஜ்

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை தமது விருப்பத்திற்கேற்ப ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்குச் சென்று பயிற்சி பெறுவதை தடுப்பது மனித உரிமை மீறலாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் தொலைக்கல்வி மூலம் பயிற்சி பெறுவதா அல்லது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி பெறுவதா என்பது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விருப்பத்திற்குரியது. அந்த விடயத்தில் தலையீடு செய்வதற்கோ, தடுத்து நிறுத்துவதற்கோ கல்வி அமைச்சிற்கு எவ்விதமான உரிமையும் கிடையாது.

6, 000 ரூபா சம்பளத்தை அதிகரித்து கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கல்வி அமைச்சு, அவர்களை பயிற்சிபெற்ற ஆசிரியர்களாக்குவதற்கும் மறுப்பதில் எவ்வித நியாயமும் கிடையாது. ஆசிரியர் உதவியாளர்கள் பயிற்சியின் பின்னர்தான் ஆசிரியர் சேவைக்கே உள்வாங்கப்படுவார்கள் என்பது கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரியாத விடயமல்ல.

கடந்த காலங்களில் தொலைக்கல்வி மூலம் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டவர்கள் அந்தப் பயிற்சி நெறியை முடிப்பதற்கு ஐந்து வருடங்கள் வரை காந்திருந்த வரலாரும் இருக்கிறது.

ஆசிரியர் உதவியாளர்களுக்கு தெலைக்கல்வி மூலம் ஆசிரியர் பயிற்சியை திணிக்க முற்படுவதன் மூலம் கல்வி அமைச்சு உழைப்பு சுரண்டலையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தி ஆசிரியர் உதவியாளர்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.

அத்துடன், பொருத்தமற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதன் மூலம் இவர்கள் தானாக வேலையை விட்டு விலகிசெல்ல வேண்டும் எனக் கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்களை விட்டால் பாடசாலைகளில் படிப்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என்றால் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவை க்கு உள்வாங்கி அவர்களுக்கு அதற்குறிய சம்பளத்தை வழங்கிவிட்டு தெலைக்கல்வி பயிற்சியை பற்றி சம்பந்தப்ட்டவர்களின் இணக்கப்பாடோடு நடவடிக்கை எடுக்க முயற்சித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சே விண்ணப்பங்கள் கோரியது. தற்போது தெலைக்கல்வி மூலம் பயிற்சி வழங்க போவதாக தெரிவிப்பதும் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சே.

ஆனால், இந்தப்பிரச்சினை தற்போது மாகாண கல்வி அமைச்சே ஏற்படுத்தியிருப்பதாக தவராக பிரசாரம் செய்யப்படுகிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் முறையற்ற பனிப்புரையை மாகாண கல்வி அமைச்சுக்கள் நடைமுறைப்படுத்தி பிரச்சினையை தமது தலையில் சுமக்க கூடாது. இந்தவிடயத்தில் மாகாண சபைகளையும் அதன் அதிகாரிகளையும் காட்டி கல்வி அமைச்சு விடுபட முடியாது.

உடனடியாக ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் பயிற்சிக்கல்லூகளுக்கு பயிற்சிக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசணையை பெற்று மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]