எதிர்க்கட்சிகளின் உரிமைகளைப் பறிக்கும் சபாநாயகர் உடனயாக பதவிவிலக வேண்டும்: உதய கம்மன்பில

அரசுக்கு,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பாக செயற்பட்டுவரும் சபாநாயகர் கருஜயசூரிய உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமய பகிறங்க கோரிக்கை விடுத்துள்ளது.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமயகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர்   உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,
“”சபாநாயகர் கருஜயசூரிய மீதிருந்த நம்பிக்கையை கடந்த வாரம் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவமானது முற்றாக இல்லாதொழித்துள்ளது. சபாநாயகர் என்பவர் எதிர்க்கட்சிகளின் பாதுகாவலராகவே வரலாற்றில் இருந்தள்ளார். ஆனால், தமற்போதைய சபாநாயகர் அரசின் உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது இலங்கையில் சிரேஷ்ட அரசியல்வாதியாக தினேஷ் குணவர்த்தவை நாடாளுமன்றுக்கு வருகைத் தரக்கூடாது என அறிவித்துள்ளார்.

உதய கம்மன்பில
இப்படியான பக்கச்சார்ப்புடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பாக வும் அரசின் உறுப்பினர்களுக்குச் சார்பாகவும் செயற்படும் இவர் உடனடியாக தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்”  என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]