உதய ஆர். செனவிரத்ன ஜனாதிபதி செயலாளராக நியமனம்

ஜனாதிபதி செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் தனது கடமைகளை இன்று பிற்பகல் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுவரை ஜனாதிபதி செயலாளராக கடமை வகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்றைய தினம் பதவி விலகியிருந்தார்.

அவர் தனது அலுவலகத்தில் இருந்து நேற்று மாலை விடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ கடந்த வருடம் ஜுலை மாதம் 4ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]