உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டமை உறுதி – ராஜித

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதை டுபாய் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]