ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைக்க முடியாது என்பது குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உதயங்க வீரதுங்கவைவை இலங்கையிடம் ஒப்படைக்க முடியாது என, ஐக்கிய அரபு இராச்சியம் தெரவித்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன.
எனினும், இது தமக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், அவ்வாறான தகவலை ஊடகங்களின் ஊடாகவே தான் தெரிந்து கொண்டதாகவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]