உதயங்க வீரதுங்கவுக்கு 94 மில்லியன் ரூபாய் சொத்து

உதயங்க வீரதுங்க

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ‘உதயங்க வீரதுங்க’வின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு உக்ரேனிடம் இருந்து, நான்கு மிக் 27 போர் விமானங்கள். கொள்வனவு செய்யப்பட்டபோது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றும் விசாரணை இடம்பெற்றது.

இதன்போது தற்போது உக்ரேனில் மறைந்து வாழ்வதாக கூறப்படும் ‘உதயங்க வீரதுங்க’வின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,தெரிவித்துள்ளனர்.

தொம்பேயில், 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான 8 ஏக்கர் நிலம், 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு ஏக்கர் நிலம், பொரளையில் 29 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு என்பன உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]