உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு

அரசியல் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களைக் குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற, கோரிக்கையை முன்வைத்து கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவருகின்ற அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ப, எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21.09.2018 அன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுக்கொள்கின்றது என இவ்வமைப்பின் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில், வருடக்கணக்காக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த அரசியல் கைதிகளின் உயிர்களைக் காக்கவேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடம்பெறவுள்ள இக் கவனயீர்ப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மனிதாபிமானமுள்ள அனைவரையும் அணிதிரளுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளிற்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]