உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் நாளை (09) அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி நடை பயணம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற கோரி யாழ்.பல்கலைக்கழைக மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போரட்டத்தினை முன்னெடுத்தார்கள்.
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இன்று (08) காலை 11.00 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தினை ரத்து செய் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின், தெற்கின் போராட்டம் ஜனநாயகம், வடக்கின் போராட்டம் பயங்கரவாதம், சிங்கள அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதியா? அரசியல் கைதிகளை அரசியலுக்குப் பயன்படுத்தாதீர்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் தாங்கியவாறு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

அரசியல் கைதிகளின் விவகாரம் சட்ட விவகாரம் அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம், அரசாங்கம் அரசியல் விவகாரமாக எடுத்து, கைதிகளை நிபந்தனைகளன்றி விடுதலை செய்ய வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக இன்று (09) யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து, அநுராதபுரம் வரை நடைபயணமாக சென்று, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தவுள்ளனர்.
இந்த நடைபயணத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]