உணவு விஷமானதால் பாடசாலை மாணவர்கள் 45பேருக்கு ஏற்பட்ட நிலை!!

கல்வி சுற்றுலா சென்ற 45 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் பிரதேசத்திற்கு கல்வி சுற்றுலா சென்ற மொனராகலை பாடசாலை மாணவர்களின் உணவு விஷமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் விகாரை ஒன்றில் தங்கியிருந்த மாணவர்களினால் இந்த உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மாணவர்களின் தற்போதைய நிலை ஆபத்தாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]