உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக கூறுபவர்களை கைது செய்ய வேண்டும் – அமைச்சர் அமரவீர 

உணவு பொருட்களின்முறையற்ற வகையிலான உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக கூறுபவர்களை கைது செய்ய வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பை அடுத்து சில உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

இதன்படி ஒருகோப்பை தேநீரின் விலை 20 ரூபாவாகவும் பால் தேனீரின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாகவும், சோற்றுப் பொதி ஒன்றின் விலை 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 500 வரையில் குறைத்த போது, எந்தவொரு உணவு பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவில்லை.

எனினும் சமையல் எரிவாயுவின் விலை 110 என்ற சிறிய தொகையால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அநீதியான செயல் என்றும் விளக்கமளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]