உணவு கேட்டு வந்த மூதாட்டியின் கை கால்களைக் கட்டி கடலில் வீசிய கொடூர சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உணவு கேட்டு வந்த மூதாட்டியின் கை கால்களைக் கட்டி கடலில் வீசிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நாகர்கோவிலில் கடந்த சில மாதங்களாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் முன் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, குழந்தைகளை கடத்தி செல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த பீதியில் இருந்தனர்.

இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள மணக்குடியில் வீடு வீடாக உணவு கேட்டு வந்த மூதாட்டியை குழந்தைக் கடத்த வந்தவர் என்று தவறாக எண்ணி, அங்குள்ள இளைஞர்கள் அவரைப் பிடித்து, அவரின் கை கால்களைக் கட்டி கடலில் வீசியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]