உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்துக்கு தேவையான உணவு பொருட்களில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை என, அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பட மாட்டாது என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, பல உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக, அந்த சங்கத்தின் பேச்சாளர் ஹேமக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.