உணவுப் பொதியின் விலை அதிகரிக்கும்

உணவுப் பொதிஉணவுப் பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றிடம் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும்போது ஏனைய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

இதற்கமைய, சில உணவு வகைகள் மற்றும் பானங்களின் விலைகளை  அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உணவுப் பொதியானது, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அத்தியாவசிய உணவு வகையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும்.

அத்துடன் கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

உணவு பொதியொன்று, மூன்று மரக்கறிகள், ஒரு கீரை மற்றும் மீன் என்பனவற்றை உள்ளடக்கியதாக உரிய தரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]