உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்ட சத்துக்கொண்டான் படுகொலையின் 28 வது ஆண்டு நினைவேந்தல்

உணர்வுபூர்வமாக நினைவு கூகூறப்பட்ட ரப்பட்ட சத்துக்கொண்டான் படுகொலையின் 28 வது ஆண்டு நினைவேந்தல்

சத்துக்கொண்டான் படுகொலையின் 28 வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டது.

சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரும் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கந்தசாமி ரகுநாதன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் க.சரவணபவான், உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

09.09.1990 அன்று மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் படைமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சுற்றிவழைத்து அங்கிருந்த 186 அப்பாவித் தமிழ் மக்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றார்கள்.

இவர்களில் பெண்கள் குழந்தைகள் கற்பணி பெண்கள், சிசுக்கள் முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் அடங்கியிருந்தனர்.

இவர்கள் அனைவரும் சத்துருக்கொண்டான் பாய்ஸ் இராணுவமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். இதில் ஒருவர் மாத்திரம் பலத்த காயங்களுடன் உயிர்தப்பி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

இராணுவத்தினரால் அழைத்துச் செல்லபட்டு சிறிது நேரத்தில் அழுகுரல்கள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் பின்பு அப்பிரதேசத்தில் புகைமண்டலம் தெரிந்ததுடன் பின்னர் பிணவாடை வீசியதாக வீடுகளின் மறைந்திருந்து உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

உணர்வுபூர்வமாக நினைவு உணர்வுபூர்வமாக நினைவு உணர்வுபூர்வமாக நினைவு உணர்வுபூர்வமாக நினைவு உணர்வுபூர்வமாக நினைவு உணர்வுபூர்வமாக நினைவு உணர்வுபூர்வமாக நினைவு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]