உடை மாற்றும் அறையில் ஓட்டை போட்டு உடைமாற்றுவதை பார்த்ததால் பெரும் பரபரப்பு!!

அமெரிக்காவில் வொண்டர் உமன்’ என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த லிண்டா கார்டர், டயானா பிரின்ஸ் என்ற கேரக்டரில் நடித்து பெரும் புகழைத் தொட்டவர்.

இந்தநிலையில் அண்மையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தபோது அதிர்ச்சி சம்பவம் ஒன்றினை பகிர்ந்து கொண்டார்.

அதில், பிரபலமான தொலைக்காட்சி தொடரான வொண்டர் உமனில் நடித்து கொண்டிருந்தபோது தான் உடை மாற்றும் அறையில் ஒருவர் ஓட்டை போட்டு உடைமாற்றுவதைப் பார்த்தார் என தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு அது கேமிராமேன் என்று தெரியவந்தது எனவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து குறித்த கேமிராமேன் நீக்கப்பட்டு விட்டாலும் அச்சம் தொற்றியிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நபர் ஒருவரினால் பாலியல் தொல்லைக்கு தான் முகம் கொடுத்ததாகவும், ஆனால் அவருக்கு கடவுள் சரியான தண்டனை வழங்கிவிட்டதாகவும், இது குறித்து வேறு எதனையும் பேச விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போது நடிகைகள் தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளியே கூற ஆரம்பித்து விட்டனர்.

இதனால் மேலும் பல பாலியல் தொல்லை சம்பவங்கள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]