உடல் ரீதியான உறவு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்…

பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் ஆரோக்கியமான உடலுறவு என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலுறவு என்பது முக்கிய காரணியாக உள்ளது.

மேலும் உடலுறவு உங்களை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலம் வெளிவந்த, உடலுறவு கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. சளி மற்றும் காய்ச்சல்

வாரத்தில் இரண்டு முறை உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடும் அளவிற்கு நோயெதிர்பு சக்தி அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. உடல் எடை குறைகிறது

உடலுறவு கொள்வதால் உங்களது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதயத்தின் துடிப்பும் அதிகரிக்கிறது. மேலும் உடலுறவுகொள்வது ஒரு உடற்பயிற்சி செய்வதற்கு சமமானதாக உள்ளது.

3. மாதவிடாய் பிரச்சனை

உடல் ரீதியான உறவு

உடலுறவு மாதவிடாய் பிரச்சனையை ஒழுங்கு செய்யும் ஹார்மோன்களை சரியாக இயங்க வைக்கிறது. மேலும் எதிர்மறையான மேனோபாஸ் அறிகுறிகளை குறைக்கிறது.

4. தலை மற்றும் உடல்வலி

உடல் ரீதியான உறவு

உடலுறவு வைத்துக்கொள்ளும் போது உடலில் உள்ள ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் செயல்பட ஆராம்பிக்கிறது. இது உடல் மற்றும் தலைவலியை போக்க உதவியாக உள்ளது.

5. மார்பக புற்றுநோய்

உடல் ரீதியான உறவு

முப்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை இந்த மார்பக புற்றுநோய் தான். உடலுறவு வைத்துக்கொள்வதால், மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைகிறது

6. நறுமணங்களை உணரும் திறன்

உடல் ரீதியான உறவு

ஆரோக்கியமான உடலுறவு, உங்களின் நறுமணங்களை உணரும் திறனை அதிகரிக்கிறது. இது மூளைக்கு புத்துணர்வை தருகிறது.

7. மனஇறுக்கம் குறையும்

உடல் ரீதியான உறவு

காலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மன இறுக்கம் குறைகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]