முகப்பு Cinema உடல் எடை கூடி ஆளே மாறிபோன லக்ஷ்மி மேனன்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

உடல் எடை கூடி ஆளே மாறிபோன லக்ஷ்மி மேனன்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார். அஜித் படம் வரைக்கும் வந்தார்.

இடையில் அவருக்கு படிப்பதா, நடிப்பதா என்ற குழப்பம் வந்தது. அதிலிருந்து மீண்டும் நடிப்பு தான் என்று முடிவு செய்தார். இடையில் திடீரென உடல் குண்டானார். இதனால் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது.

தற்போது பிரபுதேவாவுடன் யங் மங் சங் படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் நடிக்க இருந்த கருப்பன் படத்திலிருந்து விலகினார். ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கால் முறிவு ஏற்பட்டதால் கருப்பன் படத்தில் நடிக்கவில்லை.

கால்முறிவுக்கு கட்டுப்போட்டு ஓய்வெடுத்ததில் மேலும் குண்டானார். இதனால் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார். அந்த படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். உடல் எடை குறைந்த நிலையில் தனியாக போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்புகளை தேட இருக்கிறார் லட்சுமி மேனன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com