உடல்முழுவதும் நெருப்பை பற்ற வைத்துக்கொண்ட அக்ஷ்ய் குமார்- காரணம் தெரியுமா??

உலகமே எதிர்ப்பது காத்திருந்த 2.0 படத்தில் நடிகர் அக்ஷ்ய் குமார் ரஜினிக்கு சவாலான ரோலை ஏற்று இப்படத்தில் நடித்து அசத்தினார். பாலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷ்ய்குமாரின் இந்தி படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் அதிகம் இடம்பெறும்.

உடல்முழுவதும்

இந்நிலையில், பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’ தயாரிக்கும் ‘தி எண்ட்’ வெப் சீரிஸில் அக்ஷய் குமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்ஷய் குமார், தன் உடல் முழுவதும் தீயை பற்ற வைத்துக் கொண்டு மேடையில் வலம் வந்தார்.

உடல்முழுவதும் உடல்முழுவதும்

இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் அக்ஷ்ய்குமார். அந்த வீடீயோவை பார்த்த அவரது மனைவி, இப்படி தீயில் இருக்கறத நான் பாக்கணுமா. இதுல பிழைச்சு, வீட்டுக்கு வா உன்னை நானே கொன்னுடறேன்’ என ட்வீட் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அக்சய் குமார், நான் நெருப்பில் நடந்துவந்ததை விட இது தான் தனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது என்று குசும்பாக பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]