உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தை மனம் திறந்த ரொனால்டோ

சிக்ஸ் பேக் உடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு எளிய முறையான உடற்பயிற்சிதான் காரணம். அதற்காக உடல் வருத்த வேண்டியதில்லை என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார்.

ரொனால்டோ

ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். தற்போதைய சூழ்நிலையில் ‘சிக்ஸ் பேக்’ தான் கட்டுக்கோப்பான உடலுக்கு அடையாளம் என நினைக்கிறார்கள்.

இதற்காக அயராது உடற்பயிற்சி, உணவுக்கட்டுபாடு என தங்களது உடலை வாட்டி வதைக்கிறார்கள். ஆனால் கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் போர்த்துக்கல் நாட்டின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

ரொனால்டோ

அவர் எப்படி தனது உடலை பாதுகாக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு தான் அதிக அளவில் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை என்று ரொனால்டோ கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]