உடலுறவு திருமணத்துக்கு முன் வைத்துக் கொள்வது நல்லதே – நடிகரின் கருத்தால் சர்ச்சை

திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது நல்லதே – நடிகரின் கருத்தால் சர்ச்சை.

உடலுறவு

இந்தியில் வக்கிடோனார் படத்தின் மூலம் பிரபலமானவர் ஆயுஷ்மான் குரானா. இவரின் சால்தன் படம் திரைக்கு வந்துள்ளது. இதில் புமிபெட்னேகளுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படம் தமிழில் வெளியான கல்யாண சமையல் சாதம் படத்தின் இந்தி ரீமேக்காகும்.

இவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் கூறியதாவது : நம் வாழும் இச்சமூகத்தில் பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களையே ஊக்குவிக்கிறோம். கல்யாணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு பகுதியாகும். அதாவது தண்ணீருக்குள் குதிப்பதுக்கு முன் அது எப்படி என்பதை அறிந்திருக்க வேண்டும். திருமணத்திற்கு பின் பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வார்கள்? எனவே திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளவேண்டும் என்றார்.

ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாவிட்டால் அவரை அனைவரும் தப்பாகவே சொல்வார்கள். அதே பிரச்சனை ஆணுக்கு என்றாலும் சிக்கல் தான். திருமணபந்தத்தில் செக்ஸ் முக்கியமனதொன்றாகும் .

சினிமாவில் நடிகர், நடிகை காதலிப்பார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையானது அப்படி இருக்காது என்று கூறினார். இவருடைய இந்த கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]