தனிமையில் இருந்த பெண்ணொருவர் கத்தியினால் குத்தப்பட்ட நிலையில் மொனறாகலை, படல்கும்பரை அரச வைத்தியசாலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்பெண்ணை கத்தியினால் குத்திய நபரை, படல்கும்பரை பொலிஸார் நேற்று (17) கைது செய்தனர்.
இந்நபர் தனிமையில் இருந்த பெண்மீது, பாலியல் வல்லுறவில் ஈடுபட முயற்சி செய்த போது, அம்முயற்சிக்கு பெண் இணங்காமையினால், ஆத்திரம் கொண்ட நபர் தம்மிடமிருந்த கத்தியினால், அப்பெண்ணின் உடம்பெங்கும் பலமுறை குத்திவிட்டு, தப்பியோடியுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிசார் தப்பியோடிய நபரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று 17-01-2019 இடம்பெற்றுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]