உடலுறவுக்குப் பின் செய்யக்கூடாதவை

உடலுறவுக்குப் பின் செய்யக்கூடாதவை. 

உடலுறவுக்குப் பின்காமமும் உடலுறவும் என்பன ஓர் கலை என்று நம் முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சில இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறப்பாக இருக்கும். உடலுறவில் ஈடுபடும் முன்னர் வயிறு நிறைய சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்பதைப் போல.

உடலுறவில் ஈடுபட்ட பின்னரும் கூட சில செயல்களில் ஈடுபட கூடாது. முக்கியமாக உடனே தூங்கக் கூடாது. இது போன்று எந்தெந்த செயல்களில் ஈடுபடக் கூடாது, அவற்றால் உறவில் என்ன எதிர்விளைவுகள் நடக்கும் என்பது பற்றி இனிக் காணலாம்

உடலுறவில் ஈடுபட்ட பின்னர் குளிப்பது

உடலுறவுக்குப் பின்

உடலுறவில் ஈடுபடும் முன்னர் குளிப்பது நல்லது. ஆனால், உடலுறவுக்குப் பின் உடனே குளிக்க செல்வது அல்லது பிறப்புறுப்பை கழுவ செல்வது தவறு. அதிலும் கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் இதை செய்ய வேண்டாம். உடலுறவில் ஈடுபட்டு சில நேரம் கழித்து மேற்கொண்டால் போதுமானது. உடலுறவுக்கு பிறகு ஏற்படும் அந்த மனநிலையில் இருந்து உடனே மாற வேண்டாம்.

உடலுறவில் ஈடுபட்ட பின்னர் நண்பருடன் பேசுவது

உடலுறவுக்குப் பின்

உடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஏதோ ஒரு வேலை முடித்து அடுத்த வேலைக்கு செல்வது போல நண்பருக்கு / தோழிக்கு கால் செய்து பேச வேண்டாம். இந்த செயல்கள் அனைத்தும் உங்களை முழு இன்பத்தை அடைய விடாமல் தடுப்பவை ஆகும்.

உடலுறவில் ஈடுபட்ட பின்னர் உறங்குவது

உடலுறவுக்குப் பின்

உடலுறவின் போது பெரும்பாலான தம்பதிகள் செய்யும் பொதுவான தவறு, இருவரில் யாரேனும் ஒருவர் உடனே உறங்கிவிடுவது. பெரும்பாலும் இந்த தவறை செய்வது ஆண்கள் தான். உடலுறவில் ஈடுபட்டவுடன் உங்கள் துணையுடன் பேசுவது, கொஞ்சுவது உறவில் இறுக்கம் பெருக உதவும். எனவே, இதை தவிர்க்க வேண்டாம்.

உடலுறவில் ஈடுபட்ட பின்னர் அலுவலக வேலை

உடலுறவுக்குப் பின்

படிப்பது அல்லது அலுவலக வேலையை செய்ய வேண்டாம். பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் அதிகம் ஆணின் துணையை தேடுவார்கள். இதன் பிறகு கொஞ்சி மகிழ்தல் தான் அவர்களுக்கு இன்பத்தை உணர உதவும். இந்த நேரத்தில் நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடுவது அவர்களை மனதளவில் பாதிக்கும்.

உடலுறவில் ஈடுபட்ட பின்னர் தனியாக தூங்குவது

உடலுறவுக்குப் பின்

உடலுறவில் ஈடுபட்டவுடன் தனியாக தூங்குவது தவறு. இது அடுத்த முறை உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை குறைத்து விடும்.
குழந்தைகளை அழைத்து உறங்குவது
சிலர் உடலுறவில் ஈடுபட்ட பிறகு குழந்தைகளை அழைத்து படுக்க வைத்துக் கொள்வார்கள். இவை அனைத்தும் நாம் மேற்கூறியவாறு முழு இன்பத்தை அடைய தடையாக இருப்பவை தான்.

உடலுறவில் ஈடுபட்ட பின்னர் சாப்பிடுவது

உடலுறவுக்குப் பின்

உடலுறவில் ஈடுபட்ட பிறகு உடனே சாப்பிட செல்ல வேண்டாம். இருவரும் சேர்ந்து சிறுது நேரம் கழித்து ஒன்றாக சமைத்து சாப்பிடுவது நல்ல யோசனை, தம்பதி மத்தியில் இது இறுக்கத்தை ஏற்படுத்த உதவும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]