உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்

உடலுக்கு வெளியேஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் 8 வயதுச் சிறுமியின் இதயத் துடிப்பு உடலுக்கு வெளியே தென்படுகிறது. இந்த வகை பாதிப்பை பென்டாலஜி என்று குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் விர்சாவயா போரன். அவருக்கு வயது 8. அந்தச் சிறுமி பென்டாலஜி என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் துடிக்கும்போதுஇ இதயம் அவரின் உடலை மீறி வெளியே வந்து துடிக்கிறது. பென்டாலஜி என்று குறிப்பிடப்படும் இந்த நோய் 55 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் ஓர் அரிய நோயாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வகை பாதிப்பில் இருப்பவர்கள் அதிக நாள் வாழ முடியாது என்று மருத்துவர்கள் அவரின் தாயிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விர்சாவயாவின் தாய்இ தொடர்ச்சியாக மருத்துவர்களைப் பார்த்து வருகிறார்.

ரஷ்யாவைச் சேர்ந்த அவர்இ சிகிச்சைக்காகப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். எல்லா இடங்களிலும் விர்சாவயாவுக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கு மறுத்துவிட்டனர். அறுவைசிகிச்சை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று மறுத்துள்ளனர். விர்சாவயா இத்தகைய பாதிப்புடன் தொடர்ந்து வாழ்க்கையை எதிர்கொண்டுவருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]