உடலுக்கு வலுசேர்க்கும் காளான், பார்லி சூப்…!

உடலுக்கு வலுசேர்க்கும் காளான், பார்லி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
காளான் – 100 கிராம்
பார்லி – 50 கிராம்
பட்டர் / எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – 4 பல்
தக்காளி – ஒன்று
ரசப்பொடி – அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
சத்து மாவு – 2 தேக்கரண்டி
ஃப்ரஷ் ஒரிகனோ – சிறிது
கொத்தமல்லித்தழை – சிறிது

செய்முறை 

* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, காளானை சிறுத்துண்டுகளாக நறுக்கவும். பார்லியை வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, காளான் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேக வைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவை கரைத்து ஊற்றி ரசப்பொடி தூசி இறக்கவும். கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும். தற்போது சத்து நிறைந்த காளான் பார்லி சூப் ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]