உடலுக்கு ஆரோக்கியம் தரும் தேங்காய் எண்ணெய்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தேங்காய் எண்ணெய்

இயற்கை எமக்கு நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயினை சமையலுக்க உபயோகப்படுத்துங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் ஆரோக்கியத்திற்கு உடலுக்கு ‘மசாஜ்’ செய்வதும் பரிதுரைக்கப்படுகின்றன. அதிலும் தேங்காய் எண்ணெய் கொண்டு உடலில் மசாஜ் செய்வது வலி நீக்கவும், உடல் வீக்கத்தினைக் குறைக்கவும் உதவுகின்றது.

உதடுகள் வெடிப்பு, வறண்டு விடுதல் இவற்றிற்கு விலை அதிகமான பொருட்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயுடன் ஒரு சொட்டு நீர் கலந்து தடவி வந்தாலே போதும்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிற்றில் தேங்காய் எண்ணெய் மிதமாய் தடவி குளிக்க பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகள் வெகுவாய் குறையும் என இயற்கை வைத்தியம் வலியுறுத்துகிறது.

உடலுக்கு ஆரோக்கியம்

வெயிலில் சென்று சருமம் வாடி வதங்கினால் சிறிது தேங்காய் எண்ணெய் தடவுங்கள். வெயில் எரிச்சல் அடங்கும். கொலஜன் நன்கு உருவாகி சருமத்தினை இளமையாக வைக்கும்.

தேங்காய் எண்ணெக்கு கிருமி, பூஞ்சை பாதிப்பு தவிர்ப்பு ஆகிய குணங்கள் இயற்கையிலேயே இருப்பதால் தான் இதனை உடலில் தடவி குளிக்கச் சொல்கிறார்கள்.

தலை வறண்டு இருந்தால் அதிக சரும பாதிப்புகள் ஏற்படலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு பராமரிப்பது பரிந்துரைக்கப்படுகின்றது.

உடலுக்கு ஆரோக்கியம்

இமை, நகம் இவற்றினை வறட்சியில் இருந்து பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

வெளியில் செல்லும்போது மேக்கப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது பஞ்சில் தேங்காய் எண்ணெய் தொட்டு முகம் முழுவதும் தடவி மேக்அப்பினை எடுத்து விடலாம். பின்னர் முகத்தினை நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளலாம். இது மிகச் சிறந்த சரும பாதுகாப்பாக அமையும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]