உடபலாத்த பிரதேச சபையின் தலைவர் வைத்தியசாலையில்

கம்பளை, உடபலாத்த பிரதேச சபையின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை, உடபலாத்த பிரதேச சபையில் இன்றைய தினம் ஏற்பட்ட கடும் வாக்குவாதங்களுடன் கூடிய பதற்றமான நிலையை அடுத்து இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான நிலையை அடுத்து, பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரால் பிரதேச சபையின் தலைவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]