உடன்பாடு நீடிக்கப்படுவது தொடர்பான கடிதம் கிடைக்கவில்லை

உடன்பாடு

கூட்டு அரசாங்கத்தின் உடன்பாடு நீடிக்கப்படுவது தொடர்பான எந்த கடிதமும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு புதப்பிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறாயின் அதற்கான கடிதம் கிடைத்துள்ளதா என்று நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் அநுரகுமார திசநாயக்க, நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு காலாவதியாகி விட்ட நிலையில், அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களை பதவியில் வைத்திருப்பதன் மூலம், அரசியலமைப்பை அரசாங்கம் மீறி விட்டது என்று கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குற்றம்சாட்டினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]