உச்ச நடிகரின் இயக்குனர்களுக்குள் திடீர் மோதல்

உச்சக்கட்ட நடிகர், பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படத்தில் உச்சகட்ட நடிகரின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், உச்சகட்ட நடிகரும் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்கி, அந்த படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இரண்டெழுத்து பெயர் கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்பொழுதுவரை அப்படத்தை பற்றிய பேச்சுக்கள்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

உச்சகட்ட நடிகர் நடிக்கும் இரண்டெழுத்து படத்தை பற்றிய பேச்சுக்களை அடிபட்டு வருவதால் பிரம்மாண்ட இயக்குனருக்கு தன்னுடைய படத்தைப் பற்றிய கவலை தற்போது அவரது மனதுக்குள் எழுந்துள்ளதாம்.

உச்ச நடிகரின்

இதனால் சமீபத்தில் அந்த இரண்டெழுத்து படத்தின் இயக்குனரை பிரம்மாண்ட இயக்குனர் வரவழைத்து ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது, உங்கள் படத்தின் புரோமோஷன்களை குறைத்துக் கொள்ளுங்கள். இப்போதே உங்கள் படத்துக்கு புரோமோஷன் செய்தால் மக்கள் என்னுடைய படத்தை மறந்துவிடுவார்கள் என்று எச்சரித்தாராம்.

அந்த இரண்டெழுத்து பட இயக்குனரும், பிரம்மாண்ட இயக்குனரின் எச்சரிக்கையை பொறுமையாக கேட்டுக் கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிவிட்டாராம்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிலாவது எச்சரிக்கையாக இருந்து படத்தை பற்றிய எந்த தகவலும் வெளிவந்துவிடாதபடி படப்பிடிப்பை நடத்த அந்த இரண்டெழுத்து பட இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]