உச்சக்கட்ட பரபரப்பில் இலங்கை அரசியல்- இன்று நடக்கப்போவது என்ன?

கடந்த ஒக்டோபர் 26 ம் திகதி முதல் இலங்கையில் தொடர்ந்து வரும் அரசியல் பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 26 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் பாராளுமன்ற பெரும்பான்மை ஆதரவு இல்லாத மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட விடயம் இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டி விட்டது.

அன்றிலிந்து என்ன தான் தடை வந்தாலும் பிரதமர் பதவியில் குந்தி இருந்த மஹிந்தவின் பிரதமர் பதவி மீது நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அறிவித்தது.

இதன் காரணமாக அரசியலில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டிய நிலையில் பல தரப்புகள் உள்ளன.

தற்போது உள்ள சூழ்நிலை குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்தும் சட்டமா அதிபருடன் நேற்று இரவு ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும், இன்று காலை எட்டு மணிக்கு மகிந்த ராஜபக்ச சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நேற்று வெளியான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதனை எதிர்த்து இன்று மனு தாக்கல் செய்கிறார்.

பாராளுமன்றத்தில் மூன்று தடவைகள் மஹிந்த மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறிய போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றாவது இறுதி கட்ட தீர்வை அறிவிப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]