உங்க வீட்டிலும் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்

செல்வங்களை தருபவர் தேவி லட்சமி. நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் லட்சும் தேவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

இதற்கு முன்னோர்கள் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் போன்ற பொருட்களை வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் உண்டாகும்.

முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை மறுநாள் பறவைக்கு, பசுவிற்கு கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் பெருகும்.

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை கொண்டு மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து குடும்பத்தினர் மட்டும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தன ப்ராப்தி அதிகரிக்கும். வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை குபேரனை வழிபட பணம் வரும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]