உங்க ராசிப்படி உங்களுக்கு எப்போ திருமணம் நடக்கும் தெரியுமா? வாங்க தெரிந்துக்கொள்வோம்

உங்களது ராசிப்படி உங்களுக்கு எந்த வயதில் திருமணமாகும் என்பது பற்றியும் கூறலாம். ஆமாம் உங்களது ராசியை வைத்து உங்க கல்யாண வயதை சொல்ல முடியும். இது சற்று சுவாரஸ்யமானதும் கூட… என்ன உங்களுக்கு எந்த வயதில் திருமணமாகும். உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைப்பார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா? அப்படி என்றால் இந்த பகுதியை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

மேஷம்.!
மேச ராசிக்காரர்கள் சீக்கிரமாக எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து விடுவார்கள். முடிவு எடுப்பது என்றால் அதில் இவர்கள் தான் பெஸ்ட். அதுவும் இவர்கள் எதையும் அதிகமாக யோசிக்கமாலேயே எடுக்கும் முடிவு கூட சரியானதாக தான் இருக்கும். இவர்களுக்கு இருபது வயதுக்கு மேலும் முப்பது வயதுக்கு முன்னரும் திருமணம் நடந்து விடும்.

ரிஷிபம்.!
ரிஷப ராசிக்காரர்கள் தங்களது வேலையிலும் சரி வாழ்க்கையிலும் சரி மிகவும் கவனமாகவும், திறமையாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ரொமேண்டிக் ஆனவர்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கும். நீங்கள் உங்களுடன் உணர்வு பூர்வமாக இணையும் ஒரு நபரை தான் திருமணம் செய்து கொள்ள நினைப்பீர்கள். நீங்கள் உங்களுக்கு மனதுக்கு பிடித்தவரை உடனடியாக தேடி பிடிக்க வேண்டும் என்பதில்லை. அவரே உங்களை தேடி வருவார். வயது என்பது உங்களுக்கு ஒரு எண் மட்டுமே.!

மிதுனம்.!
நீங்கள் எப்போதும் இரு மனதாகவே இருப்பீர்கள். உங்களுக்கு முடிவு எடுப்பதில் அதிக சிரமம் உண்டாகும். உங்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று உங்களுக்கே தெரியாது. ஒரு குழப்பத்திலேயே இருப்பீர்கள். நீங்கள் உங்களது முடிவில் தீர்மானமாக இருந்தால் 30 வயதிற்குள் திருமணமாகும்.!

கடகம்.!
உங்களுக்கு திருமணம் என்றாலும் குடும்பம் என்றாலும் மிகவும் விருப்பம். நீங்கள் மிக நீண்ட கால உறவு வேண்டும் என்றே நினைப்பீர்கள். காதலில் புதுமைகள் வேண்டும் என்று நினைப்பவர். உங்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம் வந்து விட்டது.

சிம்மம்.!
நீங்கள் எதையும் யோசித்து, மிகச்சிறந்ததையே தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் இயற்கையாகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர் தான் காதலிக்க தொடங்குவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களுக்கு துணை இல்லாமல் தனியாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த துணை கிடைப்பார். உங்களுக்கு இருபது வயதிற்கு மேல் அல்லது முப்பது வயதுக்கு முன்னர் திருமணம் நடக்கலாம்.

கன்னி.!
நீங்கள் அனைத்திலும் ஒரு பர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். நீங்கள் மிகசிறந்த ஒருவரை கண்டால் மட்டுமே அவர் மீது காதலில் இணைவீர்கள். உங்களுக்கு இருபது வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைப்பார்.

துலாம்.!
உங்களுக்கு திருமணம் என்றால் மிகவும் பிடிக்கும். உங்களுக்கு நீண்ட கால உறவு கிடைப்பதில் தடை எதுவும் இல்லை. அதற்காக நீங்கள் உங்களுக்கு பொருத்தம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் உங்களது உண்மையான துணையை கண்டு பிடிக்க சிறிது காலம் ஆகும். ஆனால் உங்களுக்கான திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.

தனுசு.!
உங்களுக்கு காதல், திருமணம் போன்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்காத ஒன்று. எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி, அது உங்களுக்கு எளிதில் போரடித்து விடும். எனவே நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் பல முறை யோசித்து நிதானமாக முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு முப்பது வயதிற்குள் திருமணம் நடக்கும்.

விருச்சிகம்.!
நீங்கள் ஒரு மிகச்சிறந்த காதலர். உங்களுக்கு எளிதில் உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல துணை கிடைத்து விடுவார். அவரை நீங்கள் எப்போது திருமணம் செய்து கொண்டாலும் உங்கள் வாழ்க்கை சொர்க்கமே!

மகரம்.!
நீங்கள் கடமையில் கவனமாக இருப்பவர் தான். ஆனால் அதற்காக உங்களுக்கு திருமண வாழ்கையில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. குடும்பத்தையும் வேலையும் போட்டு குழப்பிக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் மிகச்சிறந்த ஒரு நல்ல துணையாக இருப்பீர்கள். உங்களுக்கு இருபது வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்துவிடும்.

கும்பம்.!
நீங்கள் உங்களுக்கென ஒரு தனி சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் உங்களது கண்ணோட்டத்திலேயே பார்க்க கூடிய ஒருவர் தான். ஆனால் நீங்கள் உங்களது துணையை தேடுவதில் அவசரப்பட கூடாது. உங்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்கலாம்.

மீனம்.!
உங்களுக்கு காதலை பற்றியும் உங்களது வாழ்க்கை பற்றியும் நிறைய கனவுகள் இருக்கும். நீங்கள் உங்களது உணர்வுகளையும், உங்களது யோசனைகளையும் புரிந்து கொள்ளும்படியான ஒரு துணையை தேட வேண்டியது அவசியம். நீங்கள் இந்த விஷயத்தில் அவசரப்பட கூடாது. உங்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும். முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையில் எளிதில் கிடைத்து விடாது.!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]