உங்க ராசிப்படி உங்களுக்கான பலம், பலவீனம் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நம் எல்லோருக்குமே உணர்ச்சிகள், பலம், பலவீனம் அத்தனையும் உண்டு. ஆனால் ஒவ்வொருக்கும் ஒரு தனித்துவமான ஆற்றலும் சக்தியும் உண்டு. ஒவ்வொருவருடைய பிறந்த ராசியையும் பொருத்து அவர்களுக்கென தனித்துவமான சக்தி உண்டு. உங்களுடைய ராசிக்கு நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என தெரிஞ்சிக்க வேண்டாமா?

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அளவு கடந்த சக்தியை உடையவர்கள். உங்களுக்கு தனித்துவமான சூப்பர் சக்தியும் வேகமும் உண்டு. அதனால் உங்களால் எல்லா காரியங்களிலும் புல்லட்டில் பறப்பது போன்று மிக வேகமாக செயல்படுவீர்கள்.

ரிஷபம்

நீங்கள் எதையுமே நிதானமாக செய்யக்கூடியவர்களாக இருப்பீர்கள். ஆனால் உண்மையிலேயே யாராலும் உங்களை எந்த விஷயத்திலும் முறியடிக்க முடியாது. நீங்கள் வெற்றிபெற எந்த எல்லைக்கு வேண்டமானாலுமு் செய்யக்கூடிய துணிச்சல் வாய்ந்தவர்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அதீத ஞாபக சக்தியுடையவராக இருப்பீர்கள். நீங்கள் விலங்குகளிடம் மிகுந்த அன்பாக இருப்பீர்கள். விலங்குகளின் மொழியை எளிதாகப் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றிருப்பீர்கள். உங்களுடைய அறிவு யாராலும் வெல்ல முடியாதது.

கடகம்

உங்களுக்கு அடுத்தவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு. அடுத்தவர்கள் மனதில் உள்ளவற்றை மிக எளிதாக அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் நீங்கள். உணர்வு ரீதியாக மட்டுமல்லாது உடல் ரீதியாகவும் மற்றவர்களுடன் எளிதாக உங்களால் இணைந்துவிட முடியும்.

சிம்மம்

அண்ட சராசரித்தையே ஆளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்களாக சிம்ம ராசிக்காரர்கள் இருப்பார்கள். உங்களுடைய பிரகாசமான அறிவுக்கு முன் உங்களுடைய தற்காலிக எதிரிகளின் திட்டம் தூள்தூளாகிப் போகும். எந்த சிக்கல் வந்தாலும் உடனடித் தீர்வும் உங்களுக்கு சேர்ந்தே வரும்.

கன்னி

நீங்கள் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். எவ்வளவு ஆற்றலை செலவிடுகிறீர்களோ அதே அளவு ஆற்றலைத் திரும்பப் பெறுவீர்கள். எதைத் தொட்டாலும் பொன்னாக மாறும் அதிர்ஷ்டம் மிக்கவர்.

துலாம்

எந்த வேலையாக இருந்தாலும் ஒரு முறை கண்ணால் பார்த்தாலே செய்து முடிக்கும் ஆற்றலுடையவர். இந்த ஆற்றலும் அனுபவமும் உங்களுடைய வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் உங்களுக்குக் கைகொடுக்கும்.

விருச்சிகம்

மற்றவர்களுடைய மனதைக் கட்டுப்படுத்தும், வசியப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் உண்டு. உங்களுடைய ஒரேயொரு பார்வை போதும், அடுத்தவர்கள் மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரை கண்டுபிடித்தவிடுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அடுத்தவர்கள் வாயிலிருந்து உண்மையை பிடுங்குவதில் கெட்டிக்காரர். நீங்கள் எந்த வேலை செய்தாலும் துல்லியமாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையவராக இருப்பீர்கள்.

மகரம்

அடுத்தவர்களிடம் வளைந்து கொடுத்து செல்லும் குணமுடையவராக இருப்பீர்கள். எதையும் நடைமுறையோடு பொருத்திப் பார்க்கக் கூடியவர்கள். எதிலுமே ஒரு நேர்மை, உண்மை, சத்தியம் இருக்க வேண்டுமென உணர்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உலகையே தனியாக சுற்றி வரக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். புதுப்புது கலாச்சாரங்களையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வார்கள். மனிதநேயம் மிக்கவர்கள். சுதந்திரத்தையும் நேர்மையையும் கொண்டாடுபவர்கள்.

மீனம்

மற்றவர்களிடம் உங்களைப் பற்றிய ஏதேனும் மாயைகள் இருந்துகொண்டே இருக்கும்படி ஏதாவது செய்வீர்கள். மாயை வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள். இயல்பை விட்டு, எப்போதும் கற்பனையை நம்பக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]