உங்க ராசிப்படி உங்களுக்கு இருக்கும் மோசமான குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிப்படி உங்களுள் இருக்கும் மோசமான குணங்கள்:

மேஷம்
தேவைகள் அதிகம். ஆள நினைப்பவர்.கடுமையானவர். எதையும் சட்டென்று தூக்கி எரிய கூடியவர். பொறுமையாய் இருங்கள். கோபம் வரும் நேரங்களில் ஆழமான மூச்சு எடுத்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
நீங்கள் நம்பகமானவர், ஆனால் பிடிவாதமாக இருப்பீர்கள். அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர். பிடிவாதம், பழிவாங்கும் எண்ணத்தை காய் விடுங்கள்.

மிதுனம்
பலரால் விரும்பக்கூடியவர், அனால் இருமுகம் கொண்டவர்கள். சிலநேரங்களில் நல்லவர்களை இழக்க நேரிடும். மனதளவில் முதிர்ச்சி கொள்ளல் வேண்டும்.

கடகம்
அதிகம் உணர்ச்சிவசபடுபவர். வாழ்க்கையை போர்க்களமாக எண்ணுபவர். விரைவில் கோபமடையக்கூடியவர். பிறரை எளிதில் காயப்படுத்தக்கூடியவர்.

சிம்மம்
வீண் செலவு செய்யக்கூடியவர்கள், தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள கூடியவர்கள். மற்றவர்கள் உங்களை கவனிக்க வேண்டும், புகழ வேண்டும் என விரும்புவார்கள். உள்ளதை வைத்து மகிழ கற்றுக்கொள்ளுங்கள்.

கன்னி
மிக இருக்கமானவர்கள். அதிகம் வாதிட கூடியவர். அனைத்தையும் சரியாக செய்து முடிக்கும் நீங்கள், எல்லோரும் எப்பொழுதும் அப்படியே இருக்க வேண்டும் என எண்ணுபவர். சற்று அமைதியாய் இருங்கள். அவ்வப்போது சில தவறுகள் நடப்பது இயல்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

துலாம்
திடமான முடிவு எடுக்க முடியாதவர். சரியான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சுய நினைவால் முடிவெடுத்தலே சிறந்ததாக அமையும்.

விருச்சிகம்
தேவைகள் அதிகம் உடையவர். மற்றவர்களை கட்டுப்படுத்திவைக்கும் எண்ணம் கொண்டவர்கள். மாற்றங்களை விரும்பாதவர். பிறர்க்கு சிரமங்கள் ஏற்படுத்த கூடியவர். சுலபமாக பழகுங்கள்.

தனுசு
அப்பட்டமான கருத்துடையவர்கள். கொடூரமான எண்ணங்கள் எளிதில் வந்தடையும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

மகரம்
மிக கடுமையானவர். உழைக்கும் நேரத்தை செலவிட வேண்டாம். அதேவேளையில், உங்கள் இயல்பையும் விட்டு விட வேண்டாம்.

கும்பம்
அமைதியானவர் அதே நேரம் ஆபத்தானவர். சில நேரங்களில் பலருக்கு அதிக இடம் கொடுத்துவிட்டு, பின்னர் யோசித்து எந்த பயனும் இல்லை.

மீனம்
நிகழ்காலத்தில் இல்லாமல் வேறெங்கோ இருப்பீர்கள். அது மற்றவர்க்கு நன்றாக தெரிந்துவிடும். கற்பனை நல்லது தான், ஆனால் வாழ்வை மறந்துவிடாதீர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]