உங்க ராசிக்கு ஒத்துவராத ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- மீன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷாரா இருங்க

நம்மிடம் சில பதில் தெரியாத கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதில் ஒன்றுதான் குறிப்பிட்ட சிலரை நமக்கு ஏன் பிடித்து போகிறது அல்லது குறிப்பிட்ட சிலரிடம் இருந்து நாம் ஏன் விலகி நிற்க விரும்புகிறோம் என்பது.

காரணமேயில்லாமல் சிலர் மீது வெறுப்பும் சிலர் மீது பிரியமும் உண்டாக நம் கண்ணுக்கு புலப்படாத சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கிறது ஜோதிடம்.

ஒவ்வொருவருடைய ராசிக்கும் தனிப்பட்ட குணங்கள் பல உண்டு. இதன் அடிப்படையில் இவர்கள் வேறு சில ராசிக்காரர்களோடு பழக நேரிடும்போது ஒவ்வாமை ஏற்பட்டு விடுகிறது.

உதாரணமாக நேர்மையாக உண்மையாக சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒரு நபர் பொய்யான அதிகார துஷ்ப்ரயோகம் செய்யக்கூடிய முரட்டுத்தனமான ஆட்களுடன் பழக விரும்ப மாட்டார். பழகவும் முடியாது. இறுதியில் எது வலியதோ அதுவே மிஞ்சும்.

ஆகவே உங்கள் ராசிக்கு எரிச்சலூட்டும் ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொண்டால் அவர்களின் குண நலன்களை புரிந்து கொண்டு அமைதியாக நமது வாழ்வை வாழ்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ள முடியும் என்பதால் இந்த ஜோதிட குறிப்பு உங்களுக்கு தரப்படுகிறது.

மேஷம்
பிறப்பிலேயே தன்னம்பிக்கை மிக்க ராசிக்காரர்களான நீங்கள் அந்த குணத்திற்கு எதிராக தன்னம்பிக்கை குறைந்து நடப்பவர்களை கண்டால் எரிச்சல் அடைவீர்கள். இவர்களை கண்டால் மனம் நோகும்படி நீங்கள் எதையாவது பேசிவிடவும் கூடும் என்பதால் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளவும்.
மேஷ ராசியுடன் ஒத்து போகாத ராசிக்காரர்களாக பார்க்கப்படுவது ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்கள்.

ரிஷபம்
மிகவும் அமைதியான சுபாவமுடைய ரிஷப ராசிக்கறார்கள் அவர்களுடைய அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் உங்கள் குணத்திற்கு நேர்மாறாக மாறி கொதிப்படைவீர்கள். தவறான செயல்கள் மற்றும் சொற்கள் யாரேனும் பேசுகையில் கோபத்தின் உச்சத்தில் நீங்கள் அவர்களை காயப்படுத்தி விட நேரிடலாம் ஆகவே கவனமாக நடக்கவும்.
இவர்களுடன் ஒத்து போகாத ராசிக்காரர்கள் தனுசு, மிதுனம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் ஆவார்கள்.

மிதுனம்
பொதுவாக கேளிக்கைகள் கொண்டாட்டங்களை விரும்பும் ராசிக்காரர்களான நீங்கள் விழாக்கள் மற்றும் விருந்துகளில் சந்தோஷமாக கலந்து கொள்வீர்கள். இதற்கு எதிர்மாறான குணமுள்ளவர்களோடு நீங்கள் பழக நேரிடும்போது உங்களுக்கு இயல்பாகவே எரிச்சல் ஏற்படும். மேலும் தன்னலத்துடன் முடிவெடுக்கும் யாரை கண்டாலும் உங்களுக்கு வெறுப்பு ஏற்படும். இவர்களிடம் பொறுமையாக இருப்பது உங்களுக்கு நல்லது
உங்களுக்கு ஒத்து போகாத ராசிகள் மீனம் மற்றும் விருச்சிகம்

கடகம்
உங்கள் மனம் கொந்தளிக்கும் நேரங்களில் வெளியே அமைதி காக்கும் அற்புத குணம் கொண்டவர் நீங்கள். உங்கள் மனதில் இருப்பதை யாராலும் வரையறுத்து கூற முடியாது. மனிதர்களை விடவும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் நடத்தையையும் கூர்ந்து கவனித்து அதற்குரிய மரியாதையை தருவீர்கள். மனிதர்களின் உணர்வுகளை காயப்படுத்துபவர்களை மறுபடி நினைத்து கூட பார்க்க மாட்டீர்கள். இந்த மாதிரி நபர்களிடம் நீங்கள் ஒதுங்கியிருப்பது நல்லதுதான்.
உங்களுக்கு ஒத்து போகாத ராசிக்காரர்கள் துலாம், மிதுனம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் ஆவார்கள்.

சிம்மம்
நீங்கள் அனைவரையும் கவர்வதில் வெற்றியாளராக இருப்பீர்கள். அடுத்தவர்கள் கட்டுப்படுத்தும் போது அது உங்களுக்கு பிடிக்காது. விதண்டாவாதம் செய்பவரையும் நீங்கள் வெறுப்பீர்கள். உங்கள் அருகில் அறிவுரை செய்ய ஆட்கள் இருப்பதை விரும்புவீர்கள். அதே சமயம் அடுத்தவர் வாய்ப்பை தட்டி பறிக்கும் ஆட்களை கண்டால் எரிச்சல் அடைவீர்கள். இது போன்ற நபர்களிடம் நீங்கள் சற்று மென்மையாக நடந்து கொள்வதே நல்லது.
சிம்ம ராசிக்கு ஒத்து வராத ராசிக்காரர்கள் ரிஷபம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் ஆவார்கள்.

கன்னி
உங்கள் வாழ்க்கை துணையை சீரான முறையில் வைக்க விரும்புவீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் விரும்பத்தக்க வகையில் நடந்து கொள்வீர்கள். ஆகவே வாழ்க்கையில் சரியான முடிவெடுக்க முடியாதவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்களிடம் நீங்கள் சற்று விலகி இருப்பது சிறப்பு.
கன்னி ராசிக்கு ஒத்து வராத ராசிகள் மிதுனம், மேஷம் மற்றும் துலாம் ஆகியவைதான்.

துலாம்
நீங்கள் சமநிலையான மற்றும் முழுமையான மனிதர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் வெட்டி கதைகள் மற்றும் குறிக்கோள் இல்லாத பேச்சுக்கள் உங்களை எரிச்சலடைய செய்யும். அதேபோல ஒழுங்கற்ற அணுகுமுறை கொண்டவர்கள் மற்றும் வெளிப்படையாக உணர்வுகளை வெளிப்படுத்த முயல்பவர்களை உங்களுக்கு பிடிப்பதில்லை. இவர்களிடம் நீங்கள் மிதமான அன்பை செலுத்துவதே உங்களுக்கு நன்மை தரும்.
துலாம் ராசிக்கு ஒத்து போகாத ராசிகள் கடகம் மற்றும் ரிஷபம் ஆகும்.

விருச்சிகம்
அடுத்தவர்கள் உங்களை விமர்சிப்பதும் காயப்படுத்துவதும் உங்களுக்கு பிடிக்காது என்பதால் நீங்கள் ஒரு தனிமை விரும்பியாக இருப்பீர்கள். உங்களை சுற்றி மற்றவர்கள் இருந்தாலும் தவிர்க்க நினைப்பீர்கள். அலுப்பான மற்றும் சுவாரஸ்யமற்ற விடயங்கள் உங்களிடம் பகிரப்படும் போது நீங்கள் அவருடனும் அவர்கள் பேச்சுடனும் சலிப்படைவீர்கள். அளவுக்கு மீறி பேசுபவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டீர்கள். இவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒத்து போகாதாக ராசிக்காரர்கள் சிம்மம், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் ஆவார்கள்.

தனுசு
மிகவும் பரபரப்பான சந்தோஷமான துணிச்சல் மிக்க ஆளாக நீங்கள் இருப்பீர்கள். அடுத்தவர்களின் கருத்துக்களை கேட்க ஆவலாக இருப்பீர்கள் ஆனாலும் தன்னைப்பற்றிய பெருமைகளை அதிகம் பேசுபவர்களை உங்களுக்கு பிடிக்காது. இதற்கு மாற்றாக நடக்கும் நபர்களிடம் நீங்கள் சற்று பொறுமையை கையாள்வது அவசியம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு ஒத்து போகாத ராசிகள் கன்னி, ரிஷபம் மற்றும் மகரம் ஆகும்.

மகரம்
நாளைய பற்றிய சிந்தனை இல்லாமல் இன்றைக்கு சந்தோஷமாக இருப்பவர்களிடம் நீங்கள் சேர்ந்து இருப்பதால் கடுமையான சோதனைகள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இருப்பினும் வாழ்வில் முதிர்ச்சி இல்லாத மனிதர்களை நீங்கள்ஒதுக்கி விடுவீர்கள்.
மகர ராசிக்கு ஒத்து போகாத ராசிக்காரர்கள் சிம்மம், மேஷம் மற்றும் தனுசு ஆகியவைதான்.

கும்பம்
உங்களுக்கு சுதந்திரமாக இருப்பதே மிக விருப்பம், அதனாலேயே பொறுப்பாக இருக்க வேண்டும் என்று யாராவது பிரசங்கம் செய்தால் உங்களுக்கு எரிச்சல் வருகிறது. இப்படிப்பட்டவர்களை பார்க்கவும் உங்களுக்கு விருப்பம் இல்லை. உங்கள் சமாதானத்தை குலைக்கும் பொறாமை மற்றும் சுயநலம் கொண்டவர்களை நீங்கள் வெறுப்பீர்கள். இவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்வதை விட பொறுமையாக போவதே நல்லது. கும்ப ராசிக்காரர்களுக்கு ஒத்து வராத ராசிக்காரர்கள் கன்னி, விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் ஆவார்கள்.

மீனம்
உங்களுக்கு கெடுதல் செய்பவர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருக்க நினைப்பீர்கள். யோசிக்காமல் பேசுபவர்கள் மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் பேசுபவர்களை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உண்மையான அன்புடன் பழகாதவர்கள் மற்றும் தலைக்கனம் உள்ளவர்களிடம் பழகும்போது நீங்களும் நல்ல மாதிரியாக நடந்து கொள்ள மாட்டீர்கள். இப்படிப்பட்டவர்களோடு பழக நேர்ந்தாலும் மென்மையாக கையாள்வது நல்லது.
மீன ராசிக்காரர்களுக்கு ஒத்து வராத ராசிகள் துலாம் , தனுசு மற்றும் மிதுனம் ஆகியவைதான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]