உங்க மனைவி அதிகம் கோபப்படுறாங்களா? இதை மட்டும் செய்ங்க போதும்!!!

மனைவியின் கோபத்தை சமாளிப்பது எப்படி என தெரியாமல் தவிக்கும் ஆண்களுக்கு சில டிப்ஸ்

  • ஆண் என்ற முனைப்போடு அதிகமாக பேசாமல், அந்த தருணத்திற்கு ஏற்றாற்போல் மனைவிக்கு விருப்பமான விடயங்களை கூறி அவரை வேறு திசைக்கு மாற்ற முயற்சியுங்கள்.
  • உங்கள் மனைவியின் கோபம் அர்த்தமில்லாததாக இருந்தால் உடனே பதில் எதுவும் கூறாமல் சிறிது நேரத்தின் பின் அமைதியான பிறகு அன்பாக சொல்லி புரிய வையுங்கள்.
  • நீங்கள் செய்த செயலுக்கு எக்காரணம் கொண்டும் காரணம் சொல்ல நினைக்காதீர்கள், அது பெண்களின் கோபத்தை இன்னும் அதிகமாக்கும்.
  • சிறிது நேரம் அமைதியாக இருங்கள் அவரது கோபம் நியாமற்றது என சுட்டிக்காட்ட முயற்சிக்க வேண்டாம்.
  • மனைவி அதிகமான கோபத்தை உங்கள் மீது வெளிக்காட்டும் போது, உங்களுக்கும் கோபம் ஏற்படும் அவ்வாறான நேரங்களில் நீங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
  • கோபப்பட்டு தகாத வார்த்தைளை பிரயோகப்படுத்த கூடாது அது அவரின் மனதை வெகுவாக பாதிக்கக்கூடும்.
  • மனைவி கோபப்படும் போது, நீங்கள் உங்களது வேலையை கவனித்து கொண்டிருந்தால் அது ‘எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல” கணவன் தனது கோபத்தை கண்டுகொள்ளவில்லை என அவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தும்.
  • அதிகமாக பெண்கள் கோபப்படுவதே தன் மீது யாரும் அக்கறை கொள்ளாத சந்தர்ப்பங்களில் தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]