உங்க பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்க- உங்கள் குணாதிசயங்கள் பற்றி நாங்க சொல்லுறம்!!

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து, உங்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.

இது ஆங்கில எழுத்தை குறிக்க கூடியது :

A ? எதிலும் அதிக ஈடுபாடு உடையவர்கள்.உடல் அம்சம் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.எதிலும் உறுதியோடு இருப்பார்கள்.பிறரை வழிநடத்தும் ஆற்றல் கொண்டவர்கள்.மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க முயற்சி எடுப்பவர்கள்.

B ? மற்றவர்கள் தம் மீது வைத்திருக்கும் அன்பிற்கு மதிப்பளிப்பார்கள். பிறரின் மீது அதிக அன்பு செலுத்துபவர்கள்.தைரியம் அதிகம் இருந்தாலும் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவார்கள்.

C ? மிக சிறந்த பேச்சாளராக இருப்பார்கள்.வாயை வைத்து பிழைத்து கொள்ளும் ஆற்றல் உண்டு. அதிகம் செலவு செய்வார்கள்.

D ? ஆளுமை திறன் அதிகமாக இருக்கும். வணிக துறையில் வல்லுனராக இருப்பார்கள்.நம்பிக்கை மிக்கவர்களாகவும், பிறருக்கு உதவும் குணம் உடையவர்களாகவும் மற்றும் சுதந்திரத்திற்கு முக்கியம் அளிப்பார்கள்.

E ? மென்மையான குணம் கொண்டவர்கள்.நண்பர்கள் எளிதில் பெறும் குணம் கொண்டவர்கள்.தொடர்பு கொள்வதில் சிறந்தவர்கள்.

F ? தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைப்பார்கள்.பிறரின் நம்பிக்கைக்கு உரியவர்கள்.திட்டமிடுவத்தில் சிறந்தவர்கள்.

G ? வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள்.மற்றவர்கள் இவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் பிடிக்காது.மதத்தின் மீது அதிக பற்றுடையவர்கள்.பயணத்தில் ஆர்வம் மிக்கவர்கள்.

H ? பிறரை ஊக்குவிப்பதில் சிறந்தவர்கள்.இவர்களிடம் பேசினால் தெம்பு கிடைக்கும்.அந்த அளவுக்கு பேச்சு திறனும் மற்றவர்களை கட்டுப்படுத்தும் திறன் உடையவர்கள்.

I ? அழகு சம்பந்தமான வேலைகளை செய்வார்கள், இதில் ஆர்வம் அதிகம். மற்றவர்களை தைரியமாக எதிர்கொள்ளும் தன்மை உடையவர்கள்.

J ? விடா முயற்சியோடு செயல்படுபார்கள்.அடைய வேண்டும் என்று நினைத்ததை எப்படியாவது அடைய முயற்சி எடுப்பார்கள்.வாழ்க்கை துணையை இவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

K ? அர்த்தமுள்ள வேலைகலை செய்வார்கள்.பேச வெட்கப்படுவார்கள். பிடித்தவர்களை அன்போடு கவனிப்பார்கள்.உடல் ரீதியாக திடமாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்.

L ? சரியான நபரிடம் அன்பை வெளிப்படுத்த தயக்கம் காட்டுவார்கள்.இதனால் பிரச்சனைகள் ஏற்படலாம்.வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

M ? மற்றவர்களுக்கு சிறப்பாக அறிவுரைகள் வழங்குவார்கள்.இவர்களுக்கு சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள்.வாழ்க்கை துணையும் இவர்களிடம் உண்மையாக இருப்பார்கள்.

N ? எந்த செயலையும் முழுமையாக செய்வார்கள்.எதிலும் துடிப்போடும் விடமுயற்சியோடும் செயல்படும் எண்ணம் உடையவர்கள்.

O ? கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.இவர்களுக்கு உகந்த பணி எழுத்தாளர், பேராசிரியர், பள்ளி ஆசிரியர்.மற்றவரிடம் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார்கள்.

P ? படபடவென பேசுவார்கள்.அறிவுக்கூர்மையோடு இருப்பார்கள்.மற்றவரிடம் எப்படி பழக வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

Q ? பேச்சாளராக, எழுத்தாளராக இருப்பார்கள்.சினிமா துறைக்கு சென்றால் முன்னேற்றம் கிடைக்கும்.பத்திரிகை துறையில் ஜொலிக்க வாய்ப்புள்ளது.

R ? சிறந்த மனிதராக இருப்பார்கள்.அன்பையும் கருணையையும் வாரி வழங்குவார்கள்.சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.எதையும் லேசாக எடுத்துக்கொள்வார்கள்.

S ? புதிய யுக்தி மூலம் வெற்றி பெறுவார்கள்.மற்றவர்களின் கவனத்தை இவர்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்று எண்ணுவார்கள்.

T ? எதையும் எதிர்கொள்ளும் மன வலிமை உடையவர்கள்.எதிலும் சுறுசுருப்போடு இருப்பார்கள்.வாழ்வில் எளிதில் முன்னேறுவார்கள்.

U ? அறிவுப்பூர்வமானவர்கள். ஓவியத்திலும், எழுதுவதிலும் ஆர்வம் உடையவர்கள்.பத்திரிகை துறையில் இருந்தால் முனேற்றம் கிடைக்கும்.

V ? நடைமுறைக்கு ஏற்றவாறு வாழும் தன்மை கொண்டவர்கள்.அனைவரோடும் அன்போடு பழகுவார்கள்.மென்மையான குணம் உடையவர்கள்.

W ? புரியாத புதிராக இருப்பார்கள்.அன்பிற்கு பஞ்சம் இருக்காது.மற்றவரிடம் பாசமாக இருப்பார்கள்.

X ? மற்றவரிடம் எளிதில் பழகிவிடுவார்கள்.ஆடம்பரமாக வாழவேண்டும் என்று எண்ணுவார்கள்.

Y ? தைரியம் மிக்கவர்கள்.இக்கட்டான சூழ்நிலையில் துணிச்சலாக முடிவு எடுப்பார்கள்.

Z ? மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்கள்.எங்கு சென்றாலும் இவர்களோடு ஒரு கூட்டம் இருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]