உங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம்- உங்களுக்கு எப்படி பாஸ்??

அனைவருக்கும் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது எனில் அது திருமணம்தான். திருமணத்தின் போது ஜாதகம் பார்ப்பது போலவே மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பிறந்த திகதி பொருத்தமும் பார்க்க வேண்டும்.

ஏனெனில் ஒவ்வொரு பிறந்த திகதிக்கும் ஒரு தன்மை இருக்கும். எனவே அதற்கு பொருத்தமான திகதியுடன் திருமணம் செய்து வைக்கும்போது அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த பதிவில் உங்கள் பிறந்த திகதிக்கு பொருத்தமான மற்றும் பொருத்தமில்லாத பிறந்த திகதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பிறந்த எண் 1
1 உங்களின் பிறந்த எண்ணை கண்டுபிடிக்க உங்களுடைய பிறந்த திகதியை முழுமையாக ஒற்றை எண்ணாக வரும்வரை கூட்ட வேண்டும்.

உங்கள் பிறந்த எண் 1 ஆக இருந்தால் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி 3 மற்றும் 5 திகதிகளில் பிறந்தவர்களாவர். ஏனெனில் தலைமை குணம் கொண்ட 1 ஆம் திகதியில் பிறந்தவர்களுடன் இவர்களின் இயற்கை குணங்கள் ஒத்துப்போகும்.

தவிர்க்க வேண்டிய

எண் பிறந்த எண் 1 ஆக இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய எண் 8 ஆகும். ஏனெனில் இவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் போட்டி மனப்பான்மை இருக்கும் இது அவர்களின் திருமண வாழ்க்கையை பாதிக்கும். அதேபோல மென்மையான 2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு தொழில்ரீதியாக சிறந்த துணையாக இருக்கலாம் ஆனால் காதல் வாழ்க்கையில் சிறந்த துணையாக இருக்க இயலாது.

பிறந்த எண் 2
உங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக இருந்தால் அவர்களுக்கு பொருத்தமான ஓடி தொலைநோக்கு பார்வையுடைய 8 அல்லது மனிதாபிமானமிக்க 9 ஆகும். தொழிலில் கவனம் செலுத்தும் 8 ல் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது. காதலில் சிறந்து விளங்கும் 9 ல் பிறந்தவர்கள் கூட நல்ல தேர்வுதா

தவிர்க்க வேண்டிய எண்

நம்பகமான அதேசமயம் பணிவுமிக்க 4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு ஆரம்பத்தில் சிறந்த துணை போல தோன்றலாம் ஆனால் நாளடைவில் இவர்களுக்குள் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். 1 மற்றும் இரண்டு சிலசமயம் சிறந்த துணையாக இருக்காலம் ஆனால் எப்போதும் இருக்க முடியாது.

பிறந்த எண் 3
3 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க போகிறவர்கள் 5 மற்றும் 7 ஆம் எண்களில் பிறந்தவர்கள். சாகசங்களை விரும்புகிற, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் 5 ல் பிறந்தவர்களும் சரி, மர்மங்கள் நிறைந்த எளிதில் யூகிக்க முடியதா 7 ல் பிறந்தவர்களும் உங்கள் வாழ்க்கை அனுபவத்தை சுவாரஸ்யமாக்குவார்கள்.

தவிர்க்க வேண்டிய
எண் நம்பிக்கை மிகுந்த, எதார்த்தமான 4 ல் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. இவர்களிடம் பல நல்ல குணங்கள் தனித்து இருந்தாலும் 3 மற்றும் 4 ஒன்றாக இணையும்போது அது பொருத்தமில்லாத ஜோடியாக இருக்கும்

பிறந்த எண் 4
உங்களின் பிறந்த எண் 4 ஆக இருந்தால் மற்ற எண்களை விட வலிமையான உறவு ஒன்று உங்களுக்கு தேவைப்படும். நீங்கள் தனியாக இருப்பதை விரும்பவில்லை என்பதால் அல்ல நீங்கள் நீண்ட கால உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்பதால்தான். இதற்கு உங்களுக்கு பொருத்தமான எண் 2, மற்றும் 8 ஆகும்.

4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக 3 மற்றும் 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் உறவை தவிர்ப்பது நல்லது.

பிறந்த எண் 5
உங்களின் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 5 ஆக இருந்தால் உங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி தைரியமான 1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான், அதேமசமயம் விளையாட்டுத்தனம் அதிகமுள்ள 3 ல் பிறந்தவர்களும் சரியான ஜோடிதான். தாராள மனமும், தியாக குணமும் இருக்கும் 6 மற்றும் போட்டிபோட்டு அன்புக்காட்டும் 7 ம் சிறந்த துணைதான்.

தவிர்க்க வேண்டிய எண்
உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாத எங்கள் என்றால் அது 4 மற்றும் 8 தான். அதையும் மீறி நீங்கள் அவர்களுடன் வாழ ஆசைப்பட்டால் நீங்கள் உங்களை முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிறந்த எண் 6
உங்களுடைய பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 6 ஆக இருந்தால் நீங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள் ஆவர். ஏனெனில் உங்களால் எந்த எண்ணில் பிறந்தவருடனும் அன்பான உறவை வளர்த்துக்கொள்ள முடியும். அன்பானவர்களுக்காக நீங்கள் செய்யும் தியாகம் உங்களின் உறவை பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய எண்
என்னதான் அனைத்து எண்களோடும் உங்களால் சுமூகமான உறவை பராமரிக்க முடியுமென்றாலும் 3 மற்றும் 5 உங்களுக்கு சற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் இவர்கள் அதிக சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பிறந்த எண் 7
உங்களின் பிறந்த எண் 7 ஆக இருந்தால் நீங்கள் திருமணத்தில் பெரும்பாலும் ஆர்வம் இல்லாதவராக இருப்பீர்கள். ஆனால் இறுதியில் உங்களுக்கு திருமணம் எப்படியும் நடந்துவிடும். பெரும்பாலும் 3 மற்றும் 5 உங்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

தவிர்க்க வேண்டிய எண்
உங்களுக்கு 2 ஆம் எண்ணில் பிறந்தவர்களை எப்போதும் பிடிக்காது ஏனெனில் அவர்களை நீங்கள் மேலோட்டமாகவும், அதிக உணர்ச்சிவசப்படுபவராக மட்டுமே பார்ப்பீர்கள். 1 ஆம் எண் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகவும், 3 ஆம் எண் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் உங்களுக்கு தெரிவார்கள்.

பிறந்த எண் 8
உங்களின் பிறந்த எண் 8 ஆக இருந்தால் நீங்கள் உங்களை வழிநடத்தக்கூடிய மற்றும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தக்கூடிய நபரை திருமணம் செய்துகொள்ள விரும்புவீர்கள். கனிவுமிக்க 2 மற்றும் காதல் மற்றும் தியாகம் நிறைந்த 6 உங்களுக்கு சிறந்த தேர்வாக இருப்பார்கள்.

தவிர்க்க வேண்டிய எண்
ஆக்ரோஷமும், தலைமைபண்பும் கொண்ட 1 ல் பிறந்தவர்கள் உங்களுடன் தினமும் சண்டை போடுவார்கள். சுதந்திரத்தை விரும்பும் 5 ம் சிறந்த தேர்வாக இருக்க முடியாது.

பிறந்த எண் 9
உங்களின் பிறந்த எண் 9 ஆக இருந்தால் நீங்கள் திருமண உறவின் அனைத்து நிலைகளிலும் சவாலானவராக இருப்பீர்கள். உங்களின் மேலாதிக்க எண்ணமும், தனிமைக்கு கொடுக்கும் அதிக முக்கியத்துவமும் உங்களுக்கு 2 மற்றும் 3 எண்களில் பிறந்தவர்களை சிறந்த துனையாக உருவாக்குகிறது.

தவிர்க்க வேண்டிய எண்
நீங்கள் ஒழுங்கற்ற 5, உணர்ச்சிவசப்படக்கூடிய 7 ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் 1 மற்றும் 9 இரண்டும் எதிரெதிர் துருவங்களாகும். எனவே அவர்களிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]