உங்க நகம் இந்த நிறத்தில் இருந்தா ஆபத்தாம்!

நமக்கு நோய்கள் ஏற்படுவதை நமது உடல் உறுப்புக்கள் காட்டும் அறிகுறிகளை வைத்தே நாம் கண்டறிவோம்.

இதிலும் நமது நகங்களின் மூலம் நமது உடலில் என்ன நோய் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என கூறினால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம் நகங்களில் நிறம் மற்றும் நகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் நோய்களை கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளகர்.

நகங்கள் மிகவும் வெளிர்ந்தும், மங்கியும் காணப்பட்டால் அவர்களுக்கு இரத்த சோகை, இதய நோய்கள், ஊட்டசத்து குறைபாடு, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.

நகங்கள் நீல நிறமாக இருந்தால்,  உடலுக்கு சரியாக ஆக்சிஜென் செல்லவில்லை என்று அர்த்தமாம்.

நகங்களின் மீது கருப்பு நிறத்தில் கோடுகளாக விழுந்திருந்தால் மிகவும் மோசமான நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த நிலை, உங்களுக்கு தோல் புற்றுநோய் இருப்பதை குறிக்குமாம்.

நகம் வெள்ளையாகவும்பார்ப்பதற்கு கடினமாகவும் இருந்தால் உங்களுக்கு மஞ்சள் காமாலை என்று அர்த்தம். அத்துடன் உங்களின் கல்லீரல் சீராக வேலை செய்யவில்லை எனவும் கூறலாம்.

நகங்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் சர்க்கரை நோய், நுரையீரல் கோளாறு, தைராய்டு பிரச்சினை இருக்கலாம்.மேலும், இந்த மஞ்சள் நிற நகங்கள் பலவித தொற்றுகளினாலும் ஏற்பட்டிருக்க கூடும்.

நகங்கள் அடிக்கடி உடைகிறது என்றால் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததே காரணமாக இருக்கும். அத்துடன் தொற்றுகளின் பாதிப்பாகவும் இருக்கும்.

நகங்கள் வீங்கிய நிலையில் இருந்தால் சீரான ரத்த ஓட்டம் உடலில் இல்லையென்றாலும், ஏதேனும் கிருமிகளாலும் இந்த பிரச்சினை வர கூடும். மேலும், நாளுக்கு நாள் வீங்கி கொண்டே சிவப்பு நிறமாக மாறவும் கூடும்.

நகங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக சிவந்து சொறி ஏற்பட்டது போன்று இருந்தால் நீங்கள் கட்டாயம் அதனை கவனிக்க வேண்டும். நீங்கள் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் நீங்கள் மிகவும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுடன் இருக்குறீர்கள் என்று அர்த்தம். மேலும், பசியின்மை பிரச்சினை உங்களுக்கு இருக்க கூடும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]