உங்க காதலியின் கூட்டு எண் தெரியுமா? அப்போ அவங்க மனசுல இதுதான் இருக்குமாம்!

ஒருவரின் ராசி மற்றும் பிறந்த எண் போன்றவற்றை வைத்து அவர்களின் குணந்தை தெரிந்து கொள்ளலாம்.

அதே போல ஒருவருடைய கூட்டு எண்ணை வைத்து அவரது காதல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எண் 1

வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வம் உள்ளவர்கள். தனது கணவர் எல்லா விதத்திலும் சிறந்து காணப்பட வேண்டும் என விரும்புவார்கள். லட்சியம், நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும்.

எண் 2

கணவர் கோடு கிழித்தால், ரோடு போடுவார். கோபம் சற்றே அதிகமாக இருக்கும்.கணவரின் எல்லா செயலும், அவர் உடுத்தும் உடை உட்பட அழகாக இருக்க வேண்டும் என எண்ணுவார். பாராட்டை எதிர்பார்க்கும் குணம் கொண்டிருப்பார்.

எண் 3

அழகு என்பதை தவிர்த்து, ஆண்மையுடன் விளங்க கூடிய நபரை தான் அதிகம் விரும்புவார்கள். அச்சம் என்பதற்கு இவர்கள் வாழ்வில் இடமே இல்லை.

எண் 4

தன்னை நேசிக்கும் நபர்களிடம் எப்போதும் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுவார்கள். தங்களை சுற்றி இருக்கும் நபர்களை எப்போதும் மகிழ்ச்சி பொங்க வைத்துக் கொள்வார்கள்.

எண் 5

பேராசை கொஞ்சம் அதிகம். உலகையே சுற்றி வர வேண்டும் என விரும்புவார்கள்

எண் 6

தனது கணவர், குழந்தைக்காகவே வாழும் நபர். அவர்களை தான் உலகமாக கருதுவார்கள். தான் இருக்கும் இடம் குடிசையாக இருந்தாலும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

எண் 7

பார்த்தல் ஈகோ பிடித்தவர் போல தெரியும், பழகினால் தான் இனிமையானவர் என புரியும். அதிகார தோரணை இருக்கும் ஆணை விரும்புவார்கள்.

எண் 8

உங்களை ஒரு அபூர்வ பிறவி என கூறலாம். சோம்பேறியாக இருப்பீர்கள். எதையும் முழுமையாக செய்யும் ஆர்வம் இருக்காது. பணம், பதவியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்.

எண் 9

இவரின் அன்பும், காதலும் தான், இவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]