உங்க இல்லறத்தில் இன்பம் பொங்க செய்ய வேண்டுமா?

ஆரம்பத்தில் இனிக்கும் உறவுகள், போக, போக கசப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரம், ஆடம்பரம், குணாதிசயங்கள், தாம்பத்தியம், குழந்தை வளர்ப்பு, அழகு என பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் இல்லற வாழ்வில் பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் உண்டு.

எப்படி பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு இஞ்சி, பூண்டு, தேன் என்ற மூன்று நல்ல தீர்வளிக்க வல்லதோ. அதே போல தான் இல்லறத்தில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மூன்று வழிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கு காணலாம்…

உங்கள் துணைக்கு உங்கள் மீதான ஒரு செல்வாக்கும், சொல்வாக்கும் இருக்க வேண்டும். நீ சொல்வதை என்ன நான் கேட்பது, நீ என்ன பெரிய அறிவாளியா என்பது போல நடந்துக் கொள்ள கூடாது. இதை சரியாக பின்பற்றினாலே வீண் சண்டைகள், உறவில் விரிசல் ஏற்படாமல் தடுக்க முடியும்.

உங்கள் துணை உங்கள் சுதந்திரத்தை பறித்தால் தான் தவறு. உங்களுக்கு பாதுகாப்பாகவும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி கூறும் அறிவுரைகளை ஏற்பதில் எந்த தவறும் இல்லை. எனவே, உங்கள் மீது உங்கள் துணை அக்கறை எடுத்துக் கொள்ள தடை விதிப்பது தவறு. அக்கறை என்பது கொஞ்சுவது பாராட்டுவது மட்டுமல்ல, திட்டுவதும் கூட ஒரு வகையான அக்கறை தான்.

கோபம் இருக்கும் இடத்தில் தான் பாசம் இருக்கும் என்பார்கள். அதற்கென கோபத்தை மட்டுமே காண்பித்து ஒ=கண்டிருக்க கூடாது. ரோட்டில் இருக்கும் குப்பையை வீட்டில் கொட்டுவோமா? இல்லை தானே. பிறகு ஏன் வெளியில் இருக்கும் கோபத்தை மட்டும் துணை மீது காண்பிக்க வேண்டும்.

எல்லா உறவிலும் ஒரு பற்றை, அரவணைப்பை உண்டாக்குவது இந்த பாராட்டு தான். சில சமயங்களில் போலியான பாராட்டுகள் கூட நல்ல பலனை அளிக்கும்.

நம்மிடம் ஒரு பொருள் இருக்கும் வரை அதன் மதிப்பு தெரியாது. அதை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டோம். அதே அதை பிரிந்தால் மிகவும் வருத்தப்பாடுவோம். உடன் இருப்பவர் மீதும் அக்கறை செலுத்த வேண்டும்.

பேச்சுக்காகவாவது எப்படி இருக்க, இன்னிக்கு எப்படி போச்சு நாள், என்ன பண்ண இன்னிக்கி.. என சில கேள்விகள் கேட்டு பேச வேண்டும். அதற்கென நாளைக்கு என்ன சமையல், சட்டை இஸ்திரி பண்ணிட்டியா என வேலை ஆள் இடம் நடந்து கொள்வது போல கேள்வி கேட்க கூடாது.

உங்க இல்லறத்தில் இன்பம்

நெட்வர்க் இணைப்பு இருந்தால் தான் கால் செய்ய முடியும், இன்டர்நெட் இணைப்பு இருந்தால் தான் ஃபேஸ்புக், வாட்சைப் பயன்படுத்த முடியும்.

அதே போல கணவன், மனைவிக்குள் ஒரு நல்ல இணைப்பு இருந்தால் தான் குடும்பத்தை சரியாக வழிநடுத்த முடியும். இதை நீங்கள் செம்மையாக செய்து வந்தாலே, இல்லறம் எந்நாளும் நல்லறமாய் சிறக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]