உங்கள விட உயரம் குறைவான மனைவி கிடைத்தால் நீங்க தான் அதிஷ்டசாலி தான்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். திருமணத்தில் ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்த்து கலாச்சார முறைப்படி ஆரம்ப காலத்தில் இருந்து செய்வார்கள். தற்போது மன பொருத்தம் இருந்தால் போதும் என்கிறார்கள்.

எது எவ்வாறாயினும், சமீபத்திய ஆய்வொன்றில் கணவன் உயரமாகவும், மனைவி கணவனை விட உயரம் குறைவாகவும் இருந்தால், அவர்கள் தான் உலகின் மகிழ்ச்சியான ஜோடி என கண்டறிந்துள்ளனர்.

உயரமான ஆண்களும், உயரம் குறைவான பெண்களுக்கும் மத்தியில் ரொமாண்டிக் உறவு சிறப்பாக இருக்கிறது. இது அவர்களது தாம்பத்திய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது என இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

மற்ற ஜோடிகளுடன் ஒப்பிடுகையில், இந்த உயரமான கணவன் மற்றும் உயரம் குறைவான மனைவி ஜோடியில், மனைவியின் மகிழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக கணவர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆய்வார்கள் ஆய்வின் முடிவில் கூறியுள்ளனர். அதே போல, இவர்களது உறவும் நீண்ட காலம் நிலைத்து இருக்கிறதாம்.

இதனால், மற்ற உயர வித்தியாசம் கொண்ட தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லை என கூறிவிட முடியாது. இந்த அறிவியல் ஆய்வறிக்கையில், ஒப்பிட்டு பார்க்கும் போது உயரமான கணவர்களும், உயரம் குறைவான மனைவியரும் அதிக மகிழ்ச்சியுடன் இல்லற பந்தத்தில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.

என்ன இருந்தாலும், கடைசியில்… அவரவர் மன பொருத்தம் தான் அவரவரின் இன்பகரமான இல்வாழ்க்கைக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்பதே உண்மை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]