உங்கள் வீட்டிலும் செல்வம் செழிக்க வேண்டுமா? அப்ப இதை மட்டும் செய்தாலே போதும்!

பலரும் பணம் சேர்க்க பெரிதும் சிரமப்படுகின்றனர். அப்படி சேர்த்த பணத்தை நிலையாக வைத்திருப்பதற்கு ஆன்மிகத்தில் பல வழிகள் உள்ளது.

மகாலஷ்மி படத்திற்க்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதென்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை  முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் சிறந்த வசியமாகும்.

வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரை வைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை  நீங்கி செல்வம் கொழிக்குமாம்.

முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில்  வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றிப் பெறுமாம்.

சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகு கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும். அப்போதுதான் மகாலஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாளாம்.

முக்கியமான காரியங்கள் பண சம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி  ஓம்” என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பண சம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக் கொள்ளவது நல்லது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]