உங்கள் பெயரில் உள்ள எந்த எழுத்து உங்கள் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரியுமா?

ஒருவரது பெயர் அவரது பிறப்பில் இருந்து இறப்பு வரை தாக்கம் செலுத்தும் என ஜோதிடம் கூறுகிறது. அப்படி ஒருவரது பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் அதிக முறை இடம் பெற்றிருந்தால், அவர்கள் வாழ்வில் என்னென்ன பொதுவான தாக்கங்கள் ஏற்படலாம் என பார்க்கலாம்.

D, M, T D, M or T

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் இடம் பெற்றிருந்தால், அவர்கள் கடினமாக உழைக்கும் குணம் கொண்ட நபர்களாக திகழ்வார்கள்.இவர்கள் தொழில் செய்வதில், சொந்தமாக வேலை செய்வதில் அதிக முயற்சிகாட்டலாம். சொந்த தொழில் செய்வது இவர்களுக்கு வெற்றியை பரிசளிக்கும்.

E, N, H, X E, N, H or X

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் இடம் பெற்றிருந்தால், அவர்கள் வாழ்வில் பணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இவர்கள் பணத்தை சேமிப்பதில், செலவு செய்வதில் பாதிக்கு பாதி ஜாக்கிரதையாகவும், அஜாக்கிரதையாகவும் இருப்பார்கள்.

V, U, W V, U or W

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் இடம் பெற்றிருந்தால், அவர்கள், இயல்பிலேயே மனிதாபிமானம் அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் கடமையை செய்வதில் இருந்து தப்பி ஓடமாட்டார்கள். யாருக்கேனும் உதவி என்றால் முதல் ஆளாக ஓடிப்போய் முன்னே நிற்பார்கள். உணர்வு ரீதியாக பிணைந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு லக் என்பது கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்.

A, I, J, Y, Q A, I, J, Y, or Q

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிக முறை இடம் பெற்றிருந்தால், அவர்கள் கொஞ்சம் மூர்கமாகவும், பேரார்வத்துடனும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களுக்கான சுதந்திரத்தை அதிகம் விரும்பி, வாய்ப்புகளை தட்டிக்கழிப்பது பாதிப்பை உண்டாக்கும். இது உறவுகளிலும் தாக்கம் உண்டாக்கும்.

B, R, K B, R or K

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் இடம் பெற்றிருந்தால், அவர்கள் இயற்கையாகவே அமைதியாக வளர்ந்த நபராக காணப்படுவார். இவர்கள் மிக நெருக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு உறவில் பழகுவார்கள். இவர்களது பாதுகாப்பற்ற உணர்வு, வாழ்நாள் முழுக்க இவர்களுக்கு ஒரு தடையகாவே இருக்கும்.

C, G, S , L C, G, S or L

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் இடம் பெற்றிருந்தால், அவர்கள் இயற்கையாகவே நல்ல குணங்கள் கொண்டிருப்பார்கள். இனிமையாக, அக்கறையுடன், அன்புடன் பழகும் குணத்திற்கு அடையாளமாக காணப்படுவார்கள். வாழ்க்கை முழுதும் தங்களை சுற்றி இருக்கும் நபர்களுக்கு பிடித்தமான நபராக வாழ்வார்கள். இவர்கள் மத்தியில் இசை திறமை காணப்படலாம்.

O, Z O or Z

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் இடம் பெற்றிருந்தால், அவர்கள் மத அறநெறிகளுடன் அதிக பிணைப்பு கொண்டு காணப்படுவார்கள். உதவி, ஆன்மீக செயல்களில் தங்களை ஈடுப்படுத்திக் கொள்வார்கள். படிப்பில் கெட்டியாக இருந்தாலும், கொஞ்சம் அடமும் இருக்கும்.

P, F P or F

என்ற எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிக முறை இடம் பெற்றிருந்தால், அவர்கள், வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ்வார்கள். அவர்களது எண்ணம் சிறந்து காணப்படும். பெரிய அறிவாற்றல் கொண்டிருப்பார்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தும் வல்லமைபெற்றிருப்பார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]