உங்கள் படுக்கும் முறையிலேயே உடல் ஆரோக்கியத்தை அறியலாம்- நீங்க எப்படி பாஸ்??

படுத்தவுடன் தூங்கி விடுபவர்கள் பாக்கியவான்கள் என்பார்கள். அதேநேரம் நாம் படுக்கும் முறையை வைத்தே நம் ஆரோக்கியத்தைக் கண்டெடுத்து விடலாம்.

முதுகுவலி தொடங்கி இதயநோயில் இருந்து நம்மை காப்பது வரை நம் படுக்கைமுறைக்கு தொடர்பு உண்டு. முதுகுப்புறமாக படுப்பதன் மூலம் தலை, கழுத்து, தண்டுவட பகுதி நடுநிலையாக இருக்கும். இதனால் கழுத்து வலி வராது. முகத்தில் உள்ள சருமம் மேல் நோக்கி செல்லாமல் இருப்பதால் முகத்தில் சுருக்கம் விழாது. இந்நிலையில் தலை மேல்நோக்கி இருப்பதால் வயிற்றிலுள்ள செரிமான அமிலம் மேல்நோக்கி வருவது குறைந்து நெஞ்சு எரிச்சல் வராது. பொதுவாக குறட்டை விட்டுத் தூங்குபவர்கள் இந்த நிலையில் படுக்கக்கூடாது.

இவர்களுக்கு குப்புறப்படுத்து தூங்குவது கைகொடுக்கும். அவர்களுக்கு இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும். மூட்டு வலி உள்ளவர்ளுக்கு இந்த நிலையில் படுத்தால் தசை, நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மூட்டுவலி அதிகரிக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு பக்கவாட்டில் சாய்ந்து படுக்கும் நிலை நல்லபலனைக் கொடுக்கும். இதனால் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராக சென்று அடைந்து குழந்தை வளர்ச்சிக்கு கைகொடுக்கும். ஆனால் கர்ப்பமாக இல்லாத சமயங்களில் பெண்கள் இப்படிப் படுத்தால் மார்பகங்கள் சமநிலையற்று போக வாய்ப்புண்டு. குறட்டை விடுபவர்களும், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களும் இப்படிப் படுக்கலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]