உங்கள் கனவில் அடிக்கடி நாய் வருகிறதா? இந்த ஆபத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம்!

நித்திரையில் கனவு வருவது பொதுவான ஒரு விடயம். அவ்வாறு நாம் காணும் கனவுகளுக்கு அர்த்தங்களும் இருக்கிறது.

நமது கனவில் மிருகங்கள் வந்தால் நமக்கு ஆபத்து வருகிறது உன கூறுவார்கள். ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

இந்த பதிவில் கனவில் அடிக்கடி நாயை கண்டால் என்ன பலன் என பார்க்கலாம்.

நாய் கடிப்பது போல

நாய் கடிப்பது போல கனவு வந்தால் அப்படி வந்தால் எச்சரிக்கையாய் இருங்கள், ஏனெனில் இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட போவதின் அடையாளமாக இருக்கும்.

கனவில் உங்களை நாய் கையில் கடித்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் விரைவில் துரோகம் செய்ய போகிறார்கள் என்று அர்த்தம்.

உங்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடியான சூழ்நிலையில் உங்களுக்கு விருப்பமானவர்களே உங்களை தவிக்க விட்டுவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இது நீங்கள் செய்ததற்கான எதிர்வினையாக இருக்கலாம்.

நாய் உங்கள் துரத்துவது போல

நாய் துரத்துவது போன்ற கனவு வருவது உங்களை நோக்கி காதல் வரப்போகிறது என்பதன் அர்த்தம்.

நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்கள் உங்களை தேடி வரப்போவதன் அர்த்தம்தான் இது. இல்லையெனில் உங்களை யாரோ மனதிற்குள் காதலிப்பதன் அர்த்தம் இது.

பிரவுன் நாய் 

உங்கள் கனவில் ப்ரவுன் நிற நாய் வருவது நல்ல அறிகுறி அல்ல.

இவ்வாறு வருவது நீங்கள் மிகவும் மோசமான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

உங்கள் கனவில் ப்ரவுன் நாய் வந்தால் அதற்கு பின் நீங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வையுங்கள்.

வெள்ளை நாய் நிற நாய்

உங்கள் கனவில் வெள்ளை நாய் வந்தால் நிம்மதியாக இருங்கள், ஏனெனில் இது நல்ல அறிகுறியாகும்.

இது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க போகிறார்கள் என்பதன் அறிகுறியாகும்.

அவர்களின் நோக்கங்கள் உண்மையானதாகவும், உங்களுக்கு நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும். இந்த கனவு வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்க போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

கருப்பு நாய்

பொதுவாக கருப்பு நாய் கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படபோவதன் அறிகுறி ஆகும்.

இது உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் பல சம்பவங்களை பிரதிபலிப்பாகும்.

இது உங்கள் நெருக்கமானவர்களின் இருந்த பக்கங்களை உணர்த்துவதாக இருக்கும்.

உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம் அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இது உங்களுக்கு அதீத பதட்டம் ஏற்படப்போகிறது என்பதை குறிக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]