உங்கள் அம்மா தான் உலகிலேயே அழகு என்பதற்கான 15 காரணங்கள்

இந்த உலகிலேயே மிகவும் உறுதியான பிணைப்பு என்னவென்றால் ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் காட்டும் அன்பு தான்.

நீங்கள் எப்பொழுதெல்லாம் தவறு செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்காக தந்தையிடம் திட்டு வாங்குபவர் தான் அன்னை.

நீங்கள் குழந்தையாக இருந்த நேரங்களில், உங்களை கவனித்துக் கொள்வதற்காக அவள் கண் விழித்த நாட்களை கணக்கில் சொல்ல முடியாது. நீங்கள் விழித்தெழுவதற்கு வெகுநேரம் முன்னதாகவே அவள் எழுந்திடவும் மற்றும் நீங்கள் நன்றாக உறங்குவதை உறுதி செய்த பின்னர் தூங்குவதும் தான் அவளுடைய வழக்கம்.

சில நேரங்களில் நீங்கள் அவரிடம் மிகவும் கொடுமையாக நடந்து கொண்டிருந்தாலும் கூட, அவள் உங்களை மன்னித்திருப்பாள்.

நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, நீங்கள் என்ன செய்தாலும் தாய் உங்களுடக்கு ஆதரவாக இருப்பாள்.

தாயானவள் எளிமையான இதயத்தைக் கொண்டிருக்கும் எளிமையான பெண்ணாவாள். இந்த அன்பை மட்டுமே அவள் உங்களிடம் எதிர்பார்ப்பாள்.

ஒவ்வொருமுறை உங்களைத் திட்டி விட்டு, சத்தமில்லாமல் தனியே சென்று அதை நினைத்து அவள் அழுது கொண்டிருப்தை கவனித்திருக்கிறீர்களா?

உடனடி பண தேவையா எதுவாக இருந்தாலும் உங்களுடைய ஆசைக்கு தாய் முன்னுரிமை கொடுத்து, ஆதரவு தருவாள். ‘முடியாது’ என்று அவள் சொல்லமாட்டாள்.

உங்கள் மேல் எவ்வளவு கோபமிருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்திடுவாள் தாய். கோபமாக இருந்தாலும் நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா என்பதையும், தூங்கும் போது உங்களுடைய போர்வை சரியாக உள்ளதா என்பதையும் பார்த்து சரி செய்வாள்.

நாட்கள் செல்லச் செல்ல உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும் வளர்த்துக் கொண்டு செல்லும் ஒரே மனிதர் உங்களுடைய தாயார் தான்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவளுடைய மடியில் உங்களால் நிம்மதியாக துயில முடியும்.

எத்தனை முறை நீங்கள் அவளை உதாசீனப்படுத்தி இருந்தாலும், அவற்றை கணக்கில் கொள்ள மாட்டாள். இன்னும் உங்களிடமுள்ள நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவாள்.

உங்களுக்காக உலகை தியாகம் செய்யத் தயாரானவள் அவள். நீங்கள் வயிறார சாப்பிட வேண்டுமென்பதற்காக, பட்டினி கிடந்திடுவாள்.

ஒவ்வொரு நாளும் பல பிரச்சனைகளை தாய் எதிர்கொண்டாலும், அவளுடைய முகத்தில் புன்னகை மட்டும் குறைந்திருக்காது.

உங்களுடைய குடும்பத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போன்றிருப்பவள் தாய்.

எப்பொழுதும் சரியானதையே அவள் செய்வாள். எந்தவிதமான கட்டுப்பாடுகளை அவள் உங்களுக்கு விதித்திருந்தாலும், பின்நாளில் ஒரு நல்ல மனிதனாக உங்களை மாற்றியதற்காக அவளுக்கு நன்றி சொல்லுங்கள்.

தாயும் உங்களைப் போல ஒருவர் தானே. ஆனால், அவளுடைய பிரச்சனைகளை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அம்மா! நீங்கள் எதைச் செய்தாலும், அதில் துன்பம் இருக்கக் கூடாது என்பதை அவள் விரும்புவாள். அதற்காக எதையும் செய்வாள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]